Tamil News  /  Astrology  /  Top 10 Tallest Temple Rajagopuram In India
கோயில் கோபுரங்கள்
கோயில் கோபுரங்கள்

Top 10 Rajagopuram: உயரமான கோபுரம் கொண்ட கோயில்கள்!

24 November 2022, 11:42 ISTSuriyakumar Jayabalan
24 November 2022, 11:42 IST

இந்தியாவில் இருக்கும் உயரமான 10 கோயில்களின் கோபுரங்கள் குறித்து இங்கே காண்போம்.

கோயில்களில் கோபுரங்கள் மிகவும் முக்கியமானது. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்னும் சொல் வழக்கமும் உண்டு. கோ என்றால் இறைவன் புரம் என்றால் இருப்பிடம். இறைவன் இருக்கும் இருப்பிடமே கோபுரம். அதனால் கோயில்களில் உள்ள கோபுரத்திற்கு மிக சிறப்பு உண்டு.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த கோபுரங்கள் மிக நேர்த்தியாக கலை நுணுக்கத்துடன் மிகப் பிரம்மாண்டமாக, மிகவும் உயரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அப்படி மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த கோபுரங்களில் மிகவும் உயரமான முதல் 10 கோபுரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

முருதேஸ்வரர் கோயில்

முருதேஸ்வரர் கோயில் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான கோயிலாகும். இது 249 அடி உயரத்தில் 20 அடுக்கு கோபுரம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது நாட்டின் மிக உயரமான கோபுரமாக உள்ளது. இது கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது.

ரங்கநாத சுவாமி கோயில்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாத சுவாமி கோயில் தென்னிந்தியாவின் வைஷ்ணவ கோயில்களில் மிகவும் புகழ்பெற்றது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான ரங்கநாத சுவாமி கோயில் கோபுரம் 239.5 அடி உயரத்தில் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த கோபுரம் ஆகும்.

அண்ணாமலையார் கோயில்

திரு அண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் இது சிவபெருமானின் பஞ்சபூத தலங்கள் அக்னி தலமாகும். இதன் ராஜகோபுரம் 217 அடி உயரம் கொண்டதாகும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும் ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இது 11 அடுக்குகள் கோபுரம் கொண்ட கோயிலாகும். இந்த கோவில் கோபுரம் 192 அடி உயரமானது.

உலகளந்த பெருமாள் கோயில்

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் நகரில் உள்ள உலகளந்த பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. 192 அடி உயரத்தில் இந்த கோயில் கோபுரம் உள்ளது.

ஏகாம்பரேஸ்வரர் கோயில்

திருக்கச்சிஏகம்பம் என பழைய சமய நூல்களில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பாநாதர் கோயில் பாடல் ஒன்றாகும். தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் இது அமைந்துள்ளது. பஞ்சபூத தலங்களில் ஒன்றான இதன் கோயிலின் கோபுரம் 190 அடி உயரம் உடையது.

அழகர் கோயில்

மதுரை அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ளது. இந்த கோடில் கோபுரத்தின் உயரம் 187 அடி ஆகும்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் 8 கோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் உடையது. இந்த கோயில் வடக்கு கோபுரம் 170 அடி உயரம் உடையது.

சாரங்கபாணி கோயில்

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டில் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. 108 திவ்யதேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. இதன் ராஜகோபுரம் 164 அடி உயரம் உடையது.

ராஜகோபால சுவாமி கோயில்

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் ஒரு வைணவ கோயில். இந்த கோயில் 16 கோபுரங்கள், 18 விமானங்கள், ஏழு பிரகாரங்கள், ஏழு மண்டபங்கள் 9 தீர்த்தங்கள் உள்ளன. ராஜகோபுரம் 154 அடி உயரம் கொண்டது.