சனி சுக்கிரன் டிசம்பரில் அதிரடி.. 2025 தொடக்கத்தில் முதல் அறுவடை செய்யும் ராசிகள்.. ஜாக்பாட் அடிக்கும்!
சுக்கிரன் மற்றும் சனி சேர்க்கை கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Saturn and Venus: நவ கிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 27, 2025 12:03 PMLove Horoscope : உங்கள் துணை இன்று அதிக பதட்டமாக உணரலாம்.. 12 ராசிக்கும் இன்று காதல் வாழ்க்கை எப்படி இருக்கு? இதோ
Mar 27, 2025 11:06 AMவருகிற 29-ம் தேதி அபூர்வ சூரிய கிரகணம்.. இந்த ராசிகளுக்குப் பிரச்னைகள் ஏற்படலாம்.. பண விஷயத்தில் மிக மிக கவனம் தேவை!
Mar 27, 2025 10:27 AMGuru Luck Rasis: கோடி கோடியாக கொட்ட வருகிறாரா குரு?.. பணத்தை அள்ளிக் கொள்ளப் போகும் ராசிகள் நீங்கள் தானா?
Mar 27, 2025 10:22 AMMoney Luck: அள்ளிக் கொடுக்க வருகின்றார் செவ்வாய்.. ஜாக்பாட்டில் சிக்கிய ராசிகள்.. வியாபார வளர்ச்சி யாருக்கு?
Mar 27, 2025 06:30 AMBad Luck: கோபமே வரக்கூடாது.. எச்சரிக்கை விடுக்கப்பட்ட ராசிகள்.. சனி அஸ்தமிக்கிறார்..எதிலும் கவனம் தேவை!
Mar 27, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : மகிழ்ச்சியான நாள் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
நவகிரகங்களில் சொகுசு நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் செல்வம், சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.
சனிபகவான் தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
சுக்கிர பகவான் வருகின்ற டிசம்பர் 28ஆம் தேதி அன்று கும்ப ராசிக்கு செல்கிறார். இந்நிலையில் கும்ப ராசியில் ஏற்கனவே பயணம் செய்து வரும் சனி பகவானோடு சுக்கிரன் இணைகின்றார். சுக்கிரன் மற்றும் சனி சேர்க்கை கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
கடக ராசி
உங்கள் ராசியில் சுக்கிரன் சனி சேர்க்கை எட்டாவது வீட்டில் நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து யோகம் கிடைக்கப் போகின்றது. நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.
நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கும்ப ராசி
உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் மற்றும் சனி சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் 2025 ஆம் ஆண்டு முதல் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக சந்தித்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதைய அதிகரிக்கும்.
புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும்.
மிதுன ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் மற்றும் சனி சேர்க்க நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கையில் ஈடுபட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
