Guru and Chandra: வருங்காலத்தை மாற்ற போகும் குரு சந்திரன்.. கோடீஸ்வரர் ராசிகள் இவர்கள்தான்.. நீங்க என்ன ராசி?
Guru and Chandra: ஜூலை இரண்டாம் தேதி அன்று சந்திர பகவான் ரிஷப ராசியில் நுழைந்தார். இதனால் குரு மற்றும் சந்திரன் இருவரும் சேர்ந்து விட்டனர். இதனால் கஜகேசரி யோகம் உருவாகியுள்ளது. ரிஷப ராசியில் உருவாகும் கஜகேசரி யோகத்தின் ஆதரவு ஒரு சில ராசிகளுக்கு கிடைக்கப் போகின்றது.

Guru and Chandra: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 29, 2025 10:53 AMசனி இன்று நுழைகிறார்.. உத்திரட்டாதியில் பண யோகம் பொங்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
Apr 29, 2025 10:44 AMபரசுராம் ஜெயந்தியில் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்! நல்ல நேரமும் லாபமும் வரும் நேரம் இது!
Apr 29, 2025 05:00 AM'நல்ல செய்தி தேடி வரும்.. உழைப்பு முக்கியம்' இன்று ஏப்.29, 2025 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 28, 2025 02:30 PMஇந்த ராசிக்காரர்களுக்கு விரைவில் அதிர்ஷ்ட யோகம்.. நிதி ஆதாயங்கள், மன அமைதி கிடைக்கும்!
Apr 28, 2025 05:00 AMவெற்றி சாத்தியம்.. பணத்தை பத்திரம்.. கவனமா இருக்க வேண்டியது யார்.. இன்று ஏப்.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடும். குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார்.
நவகிரகங்களில் குளிர்ச்சி நாயகனாக விளங்கக்கூடியவர் சந்திர பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இரண்டு கிரகங்கள் சேர்க்கையானது சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும்.
அந்த வகையில் கடந்த ஜூலை இரண்டாம் தேதி அன்று சந்திர பகவான் ரிஷப ராசியில் நுழைந்தார். இதனால் குரு மற்றும் சந்திரன் இருவரும் சேர்ந்து விட்டனர். இதனால் கஜகேசரி யோகம் உருவாகியுள்ளது. ரிஷப ராசியில் உருவாகும் கஜகேசரி யோகத்தின் ஆதரவு ஒரு சில ராசிகளுக்கு கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காண்போம்.
ரிஷப ராசி
உங்கள் ராசியில் முதல் வீட்டில் கஜகேசரி யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகின்றது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
புதிய நபர்களின் உறவுகள் உங்களுக்கு கிடைக்கும். எதிர்காலத்தில் நன்மைகளை கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இப்பொழுது அமையும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
துலாம் ராசி
உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் அமையும். நிதின் நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். அனைத்து சூழ்நிலைகளிலும் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகியுள்ளது. இதனால் எதிர்பாராத நேரத்தில் யோகம் உங்களைத் தேடி வரும். பல முக்கியமான காரியங்கள் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு கடின உழைப்புக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றமும் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நீங்கள் உச்சத்திற்கு செல்வீர்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
