Lord Sani: சனி சாட்டையை எடுத்து விட்டார்.. தாறுமாறாக அடி விழும் 3 ராசிகள்.. கஷ்டம் உறுதியானது
lord Sani: ஜூன் 30-ம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர பயணத்தை மேற்கொண்டார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு சிக்கலை ஏற்படுத்த உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Sani: நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனிபகவான் விளங்கி வருகின்றார். சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.
சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த ஜூன் 30-ம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர பயணத்தை மேற்கொண்டார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு சிக்கலை ஏற்படுத்த உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
சனிபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த உள்ளது. காலநிலை மாற்றத்தால் உங்களுக்கு முன்பு இருந்ததை விட சிக்கல்கள் அதிகமாக இருக்கும். சிறு சிறு விஷயங்களும் உங்களுக்கு பெரிய சிக்கல்களை ஏற்படுத்தப்படும். மன அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
சிறிய வேலைகளாக இருந்தாலும் முடிப்பதற்கு சற்று தாமதமாகும். நிதி இழப்புகளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது.
துலாம் ராசி
சனிபகவானின் வக்கிர பயணம் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. முன்பிருந்ததை விட தற்போது உங்களுக்கு சிக்கல்கள் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தினரிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையிடம் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
தொழில் மற்றும் வியாபாரத்தை மந்தமான சூழ்நிலை இருக்கும். நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தற்போது தலையிடாமல் இருப்பது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் அதிக நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கும்ப ராசி
சனி பகவானின் சொந்தமான ராசியாக இருக்கக்கூடிய உங்களுக்கு இவருடைய வக்கிரப் பயணம் சிக்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. தற்போது உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையவில்லை எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த சிக்கல்களாக இருந்தாலும் பொறுமையாக முடிவெடுத்து செயல்படுவது நல்லது.
தேவையற்ற வாக்குவாதங்களை மற்றவர்களிடம் தடுக்க வேண்டும். குடும்பத்தினரிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையோடு அமைதியாக இருப்பது நல்லது. புதிய வேலைகளை தற்போது தொடங்காமல் இருப்பது நல்லது. அவசர அவசரமாக செய்யக்கூடிய காரியங்களை தற்போது தவிர்ப்பது உங்களுக்கு மிகவும் நல்லது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9