Luxury Rasis: இயற்கையாகவே சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்படும் ராசிகள்
Luxury Life: பிறப்பிலேயே ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் ராசிகள் குறித்து இன்று காண்போம்.
நவகிரகங்களின் செயல்பாடுகள் ஒருவரின் ஜாதகத்தை முடிவு செய்வதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதை பொருத்து ஒவ்வொருவரின் செயல்பாடுகளும் அமையும் எனக் கூறப்படுகிறது. இந்த உலகத்தில் உயிர்கள் பிறக்கும் பொழுது 12 கிரகங்களும் இருக்கும் நிலையை பொறுத்து அவர்களின் தலைவிதி தீர்மானிக்கப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
ஒவ்வொருவரும் வெவ்வேறான குணாதிசயங்களை இயல்பிலேயே பெற்றிருப்பார்கள். 12 ராசிகளில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாக விளங்கிவரும். ஒவ்வொரு விதமான குணாதிசயங்களை மற்றவர்கள் பெற்றிருந்தாலும் தனக்கு அதிபதியாக இருக்கக்கூடிய கிரகத்தின் அடிப்படையில் ஒரு சிலர் சிறப்பான குணாதிசயத்தை பெற்றிருப்பார்கள்.
அந்த வகையில் கிரகம் மற்றும் நட்சத்திர மாற்றம் உள்ளிட்டவர்களின் அடிப்படையில் பிறப்பிலேயே சில ராசிகள் ஆடம்பர வாழ்க்கையை விரும்புவார்கள். அந்த வகையில் சொகுசு வாழ்க்கையை விரும்பக்கூடிய சில ராசிகளை இங்கே காண்போம்.
மகர ராசி
இயல்பிலேயே கடினமாக உழைக்கும் எண்ணம் கொண்ட இவர்கள், தங்களது உழைப்பால் ஆடம்பர வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள நினைப்பார்கள். தங்களுடைய வேலை மற்றும் குறிக்கோள்களில் எப்போதும் ஆழமான கவனத்தை செலுத்துவார்கள். ஆடம்பர வாழ்க்கையில் மீது ஆர்வம் கொண்ட இவர்கள் அந்த அந்தஸ்து பெறுவதற்காக இந்த எல்லைக்கும் செல்வார்கள் என கூறப்படுகிறது. தங்களது முயற்சியால் பல வெகுமதிகள் பெற்று அதன் மூலம் சொகுசு வாழ்க்கையில் வாழ்வார்கள்.
சிம்ம ராசி
சூரிய பகவானை அதிபதியாகக் கொண்ட ராசிக்காரர்கள் நீங்கள். எப்போதும் தன்னம்பிக்கையோடு தன்னை வெளிப்படுத்தக்கூடிய திறன் கொண்டவர்கள். வாழ்க்கையில் எந்த காரணத்திற்காகவும் தனது குறிக்கோளை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். ஆடம்பர வாழ்க்கை மீது எப்போதும் உங்களுக்கு ஒரு நாட்டம் இருக்கும். அதனை அனுபவிப்பதற்காகவும் அதனை பெறுவதற்காகவும் தங்களது கடின உழைப்பை எப்போதும் கொடுத்துக் கொண்டிருப்பீர்கள். அதற்காக பலவற்றை கற்றுக் கொள்வீர்கள்.
துலாம் ராசி
சுக்கிர பகவானால் ஆளப்படும் கிரகமாக நீங்கள் திகழ்ந்து வருகிறீர்கள். இயற்கையாகவே உங்களுக்கு ஆடம்பரத்தின் மீது ஆர்வம் இருக்கும். ஏனென்றால் சுக்கிர பகவான் ஆடம்பரத்தின் கடவுளாக விளங்கி வருகிறார். தேடித்தேடி கடின உழைப்பு கொடுத்து ஆடம்பரத்தை பெற்றுக் கொள்ளக் கூடியவர்கள். நீங்கள் தங்களை அலங்காரப்படுத்திக் கொண்டு மற்றவர்களிடத்தில் சொகுசாக காட்டக் கூடியவர்கள். அதற்கு மூலதனமாக உங்களது கடின உழைப்பை வைத்திருப்பீர்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9