தமிழ் செய்திகள்  /  Astrology  /  Today Rasipalan: Know Your Astrological Prediction For Today

Today Rasipalan: செலவுகளை குறையுங்கள், எதிலும் கவனம் தேவை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 30, 2022 11:50 AM IST

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை காணலாம்.

செப்டம்ர் 30ஆம் தேதிக்கான ராசிபலனை தெரிந்து கொள்ளுங்கள்
செப்டம்ர் 30ஆம் தேதிக்கான ராசிபலனை தெரிந்து கொள்ளுங்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

எடுத்த வேலையை முடிக்க முடியாமல் தடுமாறுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. நெருங்கிய உறவாக இருந்தாலும் யோசித்து கடன் கொடுத்தால் பிரச்னை இருக்காது. சந்திராஷ்டமம் நாள் என்பதால் கவனம் தேவை.

ரிஷபம்

வீட்டில் மங்கள நிகழ்ச்சிக்கு உறவினர்கள் வருவார்கள். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொள்வார்கள். தொழிலுக்கு தேவையான உதவிகளை பெறுவீர்கள். செல்வாக்கை அதிகரிக்க பொது சேவையில் இறங்குவீர்கள். உங்களைச் சுற்றி மன மகிழ்ச்சியான காரியங்கள் நடக்கும்.

மிதுனம்

உங்கள் தொழிலுக்கு தேவையில்லாத எதிர்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகளை சமாளித்து விடுவீர்கள். அரசாங்க வேலையில் பங்கெடுப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களை கவர்ச்சியான பேச்சால் சாதிப்பீர்கள். உடல் ரீதியான பாதிப்புகள் விலகும். நீண்ட காலமாக வராத கடன்களை வசூல் செய்வீர்கள்.

கடகம்

நெருங்கிய உறவால் குடும்பத்தில் சலசலப்பு உண்டாகும். தேவையில்லாத பஞ்சாயத்துகளில் இறங்க வேண்டாம். பிள்ளைகளால் சங்கடங்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. வருமானத்துக்கு அதிகமாக செலவுகள் வந்து திணறடிக்கும். வியாபாரம் சுமாராக நடக்கும். ஆன்லைன் சூதாட்டங்களை ஒதுக்கி விடுங்கள்.

சிம்மம்

தொட்ட காரியம் துலங்கும். எந்த வேலையாக இருந்தாலும் தடையின்றி நடக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண வரவு கிடைக்கும். நண்பர்களிடம் தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். தாயார் வழியில் இருந்த சொத்து பிரச்னை தீரும்.

கன்னி

குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடினமாக உழைப்பீர்கள். சகோதர வகையில் தேவையில்லாத செலவுகள் வரும். சகோதரிக்கு திருமண ஏற்பாடுகள் செய்வீர்கள். துணிச்சலும் தன்னம்பிக்கையும் கூடும். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். தொழில் துறையில் மிகுந்த முன்னேற்றம் அடைவீர்கள்.

துலாம்

ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக நடக்கும். கட்டுமானத் தொழிலில் வருமானம் பெருகும். நிலம் வாங்கி விற்கும் தொழில் அமோகமாக நடக்கும். வங்கியில் சேமிப்பை அதிகரிப்பீர்கள். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து முக்கிய திட்டங்கள் தீட்டிச் செயல்படுவீர்கள்.

விருச்சிகம்

அடுத்தவர் பேச்சை கேட்டு பைனான்சில் பணம் போட வேண்டாம். வியாபாரம் சுமாராக நடக்கும். நட்பு வட்டத்திலிருந்து உதவி எதிர்பார்ப்பது கடினம். உறவினர்களால் உருவாகும் பிரச்னை குடும்ப நிம்மதியைக் கெடுக்கும். தேவையில்லாத செலவுகள் ஏற்பட்டு கையிருப்பைக் கரையலாம்.

தனுசு

வேலை இடத்தில் வீண் பழியை சுமக்க வேண்டிய நிலை உருவாகும். கொடுத்த இடத்தில் கடனை திரும்ப பெற சிரமப்படுவீர்கள். வீட்டுச் செலவுக்காக உறவினர்களின் உதவியை எதிர்பார்ப்பீர்கள். வியாபாரம் ஏற்றம் இறக்கமாக இருக்கும். பண வரவு சுமாராகவே நடக்கும். எதிலும் கவனமாக செயல்பட்டால் பாதிப்புகள் குறையும்.

மகரம்

வியாபாரத்தை குதூகலமாக நடத்துவீர்கள். தொழில் துறைகளில் இருந்த போட்டிகள் விலகும். சிக்கனத்தைக் கடைபிடித்து தேவையில்லாத செலவுகளைக் குறைப்பீர்கள். வெளிநாடு செல்வதற்கு சில உதவிகளை நண்பருக்குச் செய்வீர்கள். கமிஷன் வியாபாரம் உரிய நேரத்தில் கை கொடுக்கும்.

கும்பம்

பங்குச்சந்தையில் கணிசமாக முதலீடு செய்வீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழில் அமோகமாக நடக்கும். வெளிநாட்டு பயணம் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். பணியிடத்தில் பளிச்சென்று வேலை செய்து பாராட்டுப் பெறுவீர்கள். குழப்பங்கள் நீங்கி நிம்மதி நிலவும்.

மீனம்

குடும்பத்துடன் சென்று ஆலய தரிசனம் செய்வீர்கள். உங்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு மனைவி பிள்ளைகள் நடப்பார்கள். நண்பராக இருந்தாலும் தேவையில்லாத அறிவுரைகள் சொல்லாதீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்