Today Rasipalan (29.07.2024): மாற்றம் பிறக்குமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (29.07.2024): மாற்றம் பிறக்குமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan (29.07.2024): மாற்றம் பிறக்குமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Published Jul 29, 2024 04:00 AM IST

Today RasiPalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூலை 29) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (29.07.2024): மாற்றம் பிறக்குமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!
Today Rasipalan (29.07.2024): மாற்றம் பிறக்குமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

இது போன்ற போட்டோக்கள்

மேஷம்

புதுமையான செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகள் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும்.

ரிஷபம்

சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்படும்.

மிதுனம்

சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.

கடகம்

தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். மனை சார்ந்த செயல்களால் ஆதாயம் உண்டாகும். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். முன்யோசனை இன்றி செயல்படுவதை குறைத்துக் கொள்ளவும். விவசாய துறைகளில் மேன்மை ஏற்படும்.

சிம்மம்

அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு கூடும். திட்டமிட்ட சில பணிகள் பலிதமாகும்.

கன்னி

உடன்பிறந்தவர்களால் அலைச்சல் உண்டாகும். சமூகப் பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். எதிர்கால சிந்தனைகள் அதிகரிக்கும்.

துலாம்

மறதி பிரச்சனைகள் ஓரளவு குறையும். கணவன், மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். எதிர்கால சிந்தனைகள் மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

விருச்சிகம்

மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் ஏற்படும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள்.

தனுசு

கடன் விஷயங்களில் பொறுமை தேவை. தந்தை வழியில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். பூர்வீக சொத்துக்களில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நுட்பமான செயல்களையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள்.

மகரம்

கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உடலில் இருந்துவந்த சோர்வு குறையும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களால் வருமான வாய்ப்புகள் உண்டாகும்.

கும்பம்

கல்வி பணிகளில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். தந்திரமான சில விஷயங்கள் மூலம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள்.

மீனம்

பொன், பொருள் சேர்க்கை சிலருக்கு உண்டாகும். வாக்கு சாதுரியம் மூலம் ஆதாயம் அடைவீர்கள். செல்வாக்கும் அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்த செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9