Today Rasipalan (27.07.2024): யாருக்கு சாதகமான நாள்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (27.07.2024): யாருக்கு சாதகமான நாள்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Today Rasipalan (27.07.2024): யாருக்கு சாதகமான நாள்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Published Jul 27, 2024 05:32 AM IST

Today RasiPalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூலை 27) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (27.07.2024): யாருக்கு சாதகமான நாள்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!
Today Rasipalan (27.07.2024): யாருக்கு சாதகமான நாள்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

இது போன்ற போட்டோக்கள்

ரிஷபம்

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இசை சார்ந்த துறைகளில் ஆதாயம் உண்டாகும். பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம்

தனவரவு தாராளமாக இருக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளி வட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். பொருளாதார நிலை உயரும்.

கடகம்

எதிலும் பதற்றமின்றி செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும்.

சிம்மம்

உத்தியோகப் பணிகளில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணி பொறுப்புகளால் கோபம் தோன்றி மறையும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். செய்யும் முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும்.

கன்னி

உயர் அதிகாரிகளால் ஆதாயம் பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உயர் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும்.

துலாம்

தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நெருக்கமானவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் ஏற்படும். மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். 

விருச்சிகம்

குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகள் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய பொருட்கள் வாங்கும் பொழுது கவனம் வேண்டும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்கள் அதிகரிக்கும்.

தனுசு

சமூகப் பணிகளில் ஆதரவு கிடைக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். சிலரின் சந்திப்புகளால் சந்தோஷம் கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் சாதகமான சூழல் அமையும். .

மகரம்

நண்பர்களுடன் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும். கூட்டாளிகள் மூலம் அனுகூலம் உண்டாகும். உங்கள் மீதான அவப்பெயர்கள் விலகும். தம்பதிகளுக்குள் நெருக்கமும், புரிதலும் அதிகரிக்கும். தன வரவுகள் திருப்திகரமாக இருக்கும். 

கும்பம்

வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுபவம் மேம்படும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

மீனம்

கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். பணி நிமித்தமான வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்