Today Rasipalan (29.08.2024): இந்த நாள் உங்களுக்கு எப்படி?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!
Today RasiPalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 29) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today RasiPalan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
எழுத்து தொடர்பான துறைகளில் புதிய அனுபவம் உண்டாகும். நெருக்கமானவர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். மனதளவில் புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். வேலை நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். களிப்பு நிறைந்த நாள்.
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்களின் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பிற மொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். புதிய தொழில் தொடங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணி நிமித்தமான வெளியூர் பயணங்கள் கைகூடும். வரவு நிறைந்த நாள்.
மிதுனம்
பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். அதிகார பதவிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.
கடகம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். தந்தை வழியில் அனுசரித்துச் செல்லவும். ஆன்மிக செயல்களில் ஆர்வம் உண்டாகும். சமையல் பணிகளில் கவனம் வேண்டும். பழைய நினைவுகளால் மனதில் ஒருவிதமான போராட்டங்கள் ஏற்பட்டு நீங்கும். செயல்களில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். சாந்தம் வேண்டிய நாள்.
சிம்மம்
சில நாட்களாக இருந்துவந்த சிக்கல்கள் குறையும். கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் ஏற்படும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் சார்ந்து சில பணிகளை மேற்கொள்வீர்கள். உடை அணியும் விதத்தில் மாற்றம் ஏற்படும். நேர்மைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.
கன்னி
வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஆதாயமான சூழல் ஏற்படும். பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உலக வாழ்க்கை பற்றிய புரிதல் ஏற்படும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பாசம் நிறைந்த நாள்.
துலாம்
பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவை உண்டாக்கும். திட்டமிட்ட பணிகள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். தன வரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கை துணையுடன் சிறுதூர பயணங்கள் சென்று வருவீர்கள். உறுதி வேண்டிய நாள்.
விருச்சிகம்
உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். பயனற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். திடீர் முடிவுகளை தவிர்க்கவும். கற்பனைகள் மூலம் சில குழப்பம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தாமதம் நிறைந்த நாள்.
தனுசு
தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். பொதுமக்கள் பணியில் ஆதாயம் ஏற்படும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். தவறிய சில பொருட்கள் பற்றிய விவரங்களை அறிவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றங்கள் பிறக்கும். கீர்த்தி நிறைந்த நாள்.
மகரம்
மனதில் இருந்துவந்த குழப்பம் விலகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். செய்கின்ற பணிகளில் திருப்தியான சூழ்நிலை ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். சலனம் நிறைந்த நாள்.
கும்பம்
பூர்வீக சொத்துக்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் லாபகரமான சூழல் அமையும். செல்வச் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனதில் சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். போட்டி பந்தயங்களில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
மீனம்
எதிர்பார்த்த சில பணிகள் நடைபெறுவதில் தாமதம் உண்டாகும். வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மனதில் இனம்புரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.
டாபிக்ஸ்