Today Rasipalan (27.08.2024): இந்த நாள் உங்களுக்கு எப்படி?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!
Today RasiPalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 27) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today RasiPalan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
முன்யோசனையின்றி செயல்படுவதை குறைத்துக் கொள்ளவும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். கல்வி பணிகளில் ஆர்வம் ஏற்படும். கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
ரிஷபம்
வரவுக்கேற்ற செலவும், வீண் அலைச்சலும் உண்டாகும். மனதில் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். உங்கள் எண்ணங்களை மற்றவரிடம் திணிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது.
மிதுனம்
முன்கோபமின்றி செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் மாற்றம் ஏற்படும். கல்வி செயல்களில் சிந்தித்துச் செயல்படவும்.
கடகம்
சமூகப் பணிகளில் கௌரவ பொறுப்புகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த திருப்தியின்மை விலகும். உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பணிகளில் புதுவிதமான சூழல் ஏற்படும். சகோதரர், சகோதரிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.
சிம்மம்
பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வெளியூர் பயணங்கள் மீதான ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும்.
கன்னி
வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் ஒத்துழைப்பு உண்டாகும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். தெய்வீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
துலாம்
நண்பர்களின் மூலம் அலைச்சல் உண்டாகும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. உழைப்பிற்கான மதிப்பு தாமதமாக கிடைக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும்.
விருச்சிகம்
பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். தொழில் துறையில் புதிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். கால்நடை தொடர்பான பணிகளில் இன்னல்கள் குறையும்.
தனுசு
எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். மற்றவர்களால் உங்களிடத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உங்களை பற்றிய பலம் மற்றும் பலவீனங்களை புரிந்துகொள்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் ஏற்படும்.
மகரம்
நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். அறிவுபூர்வமாக செயல்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
கும்பம்
மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சமூகப் பணிகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.
மீனம்
மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணம் மேம்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். இணையம் சார்ந்த பணிகளில் வருமானம் மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
டாபிக்ஸ்