Today RasiPalan: (26.08.2024): இன்று நாள் எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய முழுபலன்கள்!
Today RasiPalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 26) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today RasiPalan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கலை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். உலோகம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். உங்களின் பேச்சுக்களுக்கு மதிப்பு மேம்படும். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் ஏற்படும்.
ரிஷபம்
தோற்றப்பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்கவும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றுவீர்கள். மனதில் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும்.
மிதுனம்
புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். உணவு தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடம்பரமான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். புதுவிதமான பயணங்களின் மூலம் அனுபவம் கிடைக்கும்.
கடகம்
பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உபரி வருமானம் குறித்த சிந்தனைகள் மேம்படும். கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்மம்
அரசு பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தொழிலில் புதிய வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் பிறக்கும். எண்ணிய சில பணிகள் நினைத்தபடி நிறைவேறும். விவசாய பணிகளில் ஆதாயம் ஏற்படும். இறை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தனிமை சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும்.
கன்னி
வெளி வட்டாரங்களில் உங்கள் மீதான செல்வாக்கு அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும்.
துலாம்
இணையம் சார்ந்த துறைகளில் பொறுமை வேண்டும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். வியாபார பணிகளில் மந்தமான சூழல் அமையும். உடன்பிறந்தவர்கள் மூலம் அலைச்சல் உண்டாகும். கட்டிடம் சார்ந்த பணிகளில் சற்று கவனத்துடன் இருக்கவும். அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும்.
விருச்சிகம்
தொழில் கல்வி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். கூட்டு வியாபாரத்தில் லாபம் பெருகும். புதிய நபர்களால் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளால் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். தந்தையின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பயணங்களின் மூலம் புதிய அறிமுகம் ஏற்படும்.
தனுசு
கடன்களை தீர்ப்பதற்கான உதவிகள் கிடைக்கும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பொறுப்புகள் மேம்படும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். மற்றவர்கள் மீதான கருத்துகளில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் உடல் உழைப்பு மேம்படும்.
மகரம்
காப்பீடு தொடர்பான தன வரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிலும் கோபமின்றி செயல்படவும். எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் மூலம் புதுமை பிறக்கும். வியாபார முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். மனதில் மாற்றமான நேர்மறை சிந்தனைகள் உண்டாகும். கற்றல் திறனில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
கும்பம்
கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் மகிழ்ச்சியை தரும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். பாரம்பரியம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். இயந்திரம் தொடர்பான பணிகளில் சற்று கவனத்துடன் இருக்கவும்.
மீனம்
வழக்கு சார்ந்த விஷயங்களில் சில புரிதல்கள் ஏற்படும். சிந்தனைப் போக்கில் இருந்துவந்த குழப்பம் விலகும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். குறும்படம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
டாபிக்ஸ்