Today RasiPalan: (25.08.2024): இன்று நாள் எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய முழுபலன்கள்!
Today RasiPalan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today RasiPalan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத சில புதிய பயணங்களின் மூலம் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை தவிர்க்கவும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மேம்படும்.
ரிஷபம்
விளம்பரம் சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இரவு நேர பணிகளில் கவனத்துடன் இருக்கவும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவு கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். இனம்புரியாத சில சிந்தனைகள் மூலம் குழப்பம் உண்டாகும்.
மிதுனம்
செல்வ சேர்க்கையை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். சபைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புலனாய்வு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். போட்டிப் பந்தயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
கடகம்
உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். சுப காரியங்களில் இருந்துவந்த இடையூறுகள் விலகும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி ஏற்படும். உபரி வருமானம் குறித்த முயற்சிகள் கைகூடும். அனுபவம் நிறைந்த நாள்.
சிம்மம்
சொந்த ஊர் பயண வாய்ப்புகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஆதரவால் நன்மை ஏற்படும். மருத்துவ பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் பெருகும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும்.
கன்னி
உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான சுறுசுறுப்பின்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நவீன தொழில்நுட்ப கருவிகளால் விரயம் ஏற்படும்.
துலாம்
அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மறைமுகமான வியாபாரங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். முடிந்துபோன சில பிரச்சனைகள் மீண்டும் தொடரலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
விருச்சிகம்
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாழ்க்கை துணை வழியில் ஆதாயம் ஏற்படும். போட்டிப் பந்தயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நெருக்கடியாக இருந்துவந்த சிக்கல்கள் ஓரளவு குறையும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல் உண்டாகும்.
தனுசு
வருவாயை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் விவேகம் வேண்டும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பொறுமை வேண்டிய நாள்.
மகரம்
கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உறவினர்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். தொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். பொழுதுபோக்கு செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
கும்பம்
பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வெளி வட்டாரங்களில் பொறுமையை கடைபிடிக்கவும்.
மீனம்
விற்பனை சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். தன வருவாயை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
டாபிக்ஸ்