Today Rasipalan (22.08.2024): இன்று நாள் எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!-today rasipalan daily horoscope tamil astrological prediction for august 22 2024 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (22.08.2024): இன்று நாள் எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan (22.08.2024): இன்று நாள் எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Aug 22, 2024 05:00 AM IST

Today RasiPalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 22) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (22.08.2024): இன்று நாள் எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!
Today Rasipalan (22.08.2024): இன்று நாள் எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

மேஷம்

புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவது நல்லது. எதிர்பாராத பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக செயல்படுவீர்கள்.

ரிஷபம்

நண்பர்களின் மூலம் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி நிறைவேறும். முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். நிதானம் வேண்டிய நாள்.

மிதுனம்

மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான ரகசியங்களை பகிர வேண்டாம். மாறுபட்ட அனுபவங்களால் பக்குவம் உண்டாகும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகத்தால் சில மாற்றங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

கடகம்

உடனிருப்பவர்களின் மூலம் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். வியாபார ரீதியான பிரமுகர்களின் அறிமுகம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும்.

சிம்மம்

குடும்பத்தில் வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். விவேகத்துடன் செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். சுப காரிய பணிகளில் அலைச்சல் ஏற்படும். பயணங்களின் மூலம் ஒருவிதமான சோர்வு உண்டாகும். மேலதிகாரிகளுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

கன்னி

மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். எதிர்பாராத உதவியால் தேவைகள் பூர்த்தியாகும். வெளியூர் பயணங்களில் மாற்றமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

துலாம்

குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வேலை மாற்ற விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும்.

விருச்சிகம்

குழந்தைகளின் வழியில் கலகலப்பான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தனவரவை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். 

தனுசு

கல்வி பணிகளில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். தாய்வழி உறவுகள் மூலம் ஆதாயம் உண்டாகும். 

மகரம்

மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். எதிலும் விடாப்பிடியாக செயல்படுவீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். இசை சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.

கும்பம்

சமூகப் பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதில் தெளிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும்.

மீனம்

தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை ஏற்படும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். இணைய பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

டாபிக்ஸ்