Today Rasipalan (21.08.2024): யாருக்கு சாதகமான நாள்?.. மேஷம் முதல் மீனம் வரை.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Today RasiPalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 21) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today RasiPalan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். நீண்ட நாள் கவலைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.
ரிஷபம்
மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். சமூகம் பற்றிய காணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும்.
மிதுனம்
பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளி வட்டாரங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
கடகம்
எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். பணிகளில் பொறுமையை கையாளவும். கடன் தொடர்பான நெருக்கடிகள் மேம்படும். வழக்கு விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. நிதானம் வேண்டிய நாள்.
சிம்மம்
உறவினர்களின் வழியாக உதவிகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது நல்லது. அந்நிய வர்த்தகத்தில் லாபம் மேம்படும். எதிர்பாராத சில முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
கன்னி
குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். புதிய நபர்களால் சில மாற்றமான சூழல் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.
துலாம்
மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். மனதில் இருக்கும் எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பொறுமை வேண்டிய நாள்.
விருச்சிகம்
புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
தனுசு
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். விற்பனை துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.
மகரம்
முதலீடுகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். பேச்சுத் திறமைகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகளில் சிந்தித்துச் செயல்படவும்.
கும்பம்
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயனற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது. எழுத்து சார்ந்த துறைகளில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மீனம்
உடனிருப்பவர்களால் எதிர்பாராத செலவுகளும், நெருக்கடிகளும் உண்டாகும். உயர் அதிகாரிகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விளையாட்டு தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும்.
டாபிக்ஸ்