Today Rasipalan (20.08.2024): குழப்பங்கள் மறையும்..ஆல் தி பெஸ்ட்.. மேஷம் முதல் மீனம் வரை.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Today RasiPalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 20) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வெளியூர் வாய்ப்புகள் சாதகமாக அமையும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளால் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த சிக்கல்கள் படிப்படியாக குறையும். உடனிருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.
ரிஷபம்
வியாபார பணிகளில் பொறுமையை கையாளவும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். உடற்பயிற்சி சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். செயல்பாடுகளில் புதிய உற்சாகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் ஈடுபடுவீர்கள்.
மிதுனம்
தந்தைவழி தொழிலில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களை பற்றிய புரிதல் ஏற்படும். கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும்.
கடகம்
எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். எதிர்கால சிந்தனைகள் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது மனதிற்கு அமைதியை ஏற்படுத்தும்.
சிம்மம்
மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். அனைவரிடத்திலும் அனுசரித்துச் செல்வதன் மூலம் மன அமைதி ஏற்படும்.
கன்னி
பொறுமையுடன் செயல்பட்டு எண்ணிய காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். மனதில் உத்வேகமான தன்னம்பிக்கையும், தைரியமும் உண்டாகும்.
துலாம்
மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் மேன்மை உண்டாகும்.
விருச்சிகம்
வியாபாரத்தில் உறவினர்களின் உதவி கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவினை ஏற்படுத்தும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். மனை மீதான கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் மாற்றமான சூழ்நிலை ஏற்படும்.
மகரம்
பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் உதவிகள் மூலம் லாபம் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதை உறுத்திய சில விஷயங்களில் தெளிவான முடிவுகள் கிடைக்கும்.
கும்பம்
மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் வேகத்தைவிட விவேகம் அவசியம். எதிலும் திருப்தியற்ற சூழ்நிலை ஏற்படும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.
மீனம்
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்டகால பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். நெருக்கமானவர்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
டாபிக்ஸ்