Today Rasipalan (19.08.2024): இன்று நாள் எப்படி?.. மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today RasiPalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 19) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today RasiPalan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவரின் ஆலோசனைகள் புதுவிதமான நம்பிக்கையை ஏற்படுத்தும்.
ரிஷபம்
வாழ்க்கைத் துணை மூலம் அனுகூலம் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனைவியுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். ஆராய்ச்சி பணிகளில் மாற்றமான சிந்தனைகள் ஏற்படும்.
மிதுனம்
கடன் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். திடீர் பயணங்களின் மூலம் அலைச்சல் அதிகரிக்கும். தேவையில்லாத சிந்தனைகள் மூலம் மனதில் ஒருவிதமான தயக்கம் ஏற்படும். இணையம் முதலீடுகளில் பொறுமையுடன் செயல்படவும். கவனம் வேண்டிய நாள்.
கடகம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். அரசு பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும்.
சிம்மம்
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வாகன மாற்ற சிந்தனைகள் மேம்படும். மனை மீதான கடன் உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை தரும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும்.
கன்னி
மனதில் புதுமையான இலக்குகள் பிறக்கும். குழந்தைகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இசை சார்ந்த துறைகளில் ஆர்வம் உண்டாகும். நிர்வாகப் பணிகளில் மேன்மை ஏற்படும். கவலைகள் குறையும் நாள்.
துலாம்
மனதில் நிலையான சிந்தனையுடன் எதிர்கால பணிகளை மேற்கொள்வீர்கள். துணைவருடன் அனுசரித்துச் செல்லவும். பயணங்களின் மூலம் சோர்வு உண்டாகும். திடீர் செலவுகள் மூலம் கையிறுப்புகள் குறையும். கட்டிடப் பணிகளில் லாபம் அடைவீர்கள். .
விருச்சிகம்
கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதுவிதமான தெளிவுகள் பிறக்கும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.
தனுசு
நண்பர்களின் வருகையால் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். மனை சார்ந்த கடன் உதவிகள் சாதகமாக அமையும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைக்கான மதிப்பு கிடைக்கும்.
மகரம்
சிலருக்கு எதிர்பாராத அதிர்ச்சிகரமான செய்திகள் கிடைக்கும். கணிப்பொறி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். விவசாயப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
கும்பம்
மக்கள் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருக்கக்கூடிய குழப்பம் குறையும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். உண்மையானவர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் அமைதியின்மையான சூழ்நிலை உண்டாகும்.
மீனம்
உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். துரிதமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வரவுகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுகள் உண்டாகும்.
டாபிக்ஸ்