Today Rasipalan (18.08.2024): இந்த நாள் உங்களுக்கு எப்படி?..மேஷம் முதல் மீனம் வரை.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Today RasiPalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 18) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today RasiPalan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
பயணம் சார்ந்த செயல்களில் அனுபவம் கிடைக்கும். வெளியூர் வேலைவாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். உறவினர்களிடத்தில் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
திட்டமிட்ட காரியங்களில் சிறு அலைச்சலுக்கு பிறகு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகப் பணிகளில் மேன்மை உண்டாகும். சகோதரர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். சிந்தனைப் போக்கில் புதுமைகள் ஏற்படும். ஆரோக்கிய செயல்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
மிதுனம்
குடும்பத்தில் இருந்துவந்த சூழ்நிலை அறிந்து செயல்படவும். அமைதியான செயல்கள் உங்கள் மதிப்பை மேம்படுத்தும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். அரசு சார்ந்த செயல்களில் அலைச்சல் உண்டாகும்.
கடகம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். எதிர்பார்த்திருந்த தன வரவுகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும்.
சிம்மம்
நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் எதிர்பார்த்த இடம் மாற்றம் சாதகமாக அமையும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.
கன்னி
கணவன், மனைவிக்கிடையே புரிதலும், ஒற்றுமையும் ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பொழுதுபோக்கு செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். தன வரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும்.
துலாம்
உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கல்வி பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். வித்தைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலை ஏற்படும். சொந்த ஊர் பயண சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும்.
விருச்சிகம்
மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஏற்றமான சூழ்நிலை ஏற்படும். வியாபார பணிகளில் அனுகூலமும், செல்வாக்கும் அதிகரிக்கும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் சில மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும்.
தனுசு
வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். கமிஷன் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்
அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற சிந்தனைகள் மூலம் சோர்வு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
கும்பம்
பணிபுரியும் இடத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். திடீர் பயணங்களின் மூலம் அலைச்சல் ஏற்படும். பயனற்ற செலவுகளை குறைப்பது நல்லது. கடன் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகளிடம் சற்று அனுசரித்துச் செல்லவும். வங்கி பணிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும்.
மீனம்
வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பணி நிமித்தமான ரகசியங்களை பகிராமல் இருக்கவும். உறவினர்களோடு மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவான முடிவுகள் பிறக்கும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும்.
டாபிக்ஸ்