Today Rasipalan (15.08.2024):யாருக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும்?.. மேஷம் முதல் மீனம் வரை.. இன்றைய ராசிபலன்கள் இதோ!-today rasipalan daily horoscope tamil astrological prediction for august 15 2024 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (15.08.2024):யாருக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும்?.. மேஷம் முதல் மீனம் வரை.. இன்றைய ராசிபலன்கள் இதோ!

Today Rasipalan (15.08.2024):யாருக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும்?.. மேஷம் முதல் மீனம் வரை.. இன்றைய ராசிபலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Aug 15, 2024 06:07 AM IST

Today RasiPalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 15) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (15.08.2024):யாருக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும்?.. மேஷம் முதல் மீனம் வரை.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Today Rasipalan (15.08.2024):யாருக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும்?.. மேஷம் முதல் மீனம் வரை.. இன்றைய ராசிபலன்கள் இதோ!

மேஷம்

கவலைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அதிகரிக்கும். வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.

ரிஷபம்

உத்தியோகப் பணிகளில் தடுமாற்றம் ஏற்படும். வர்த்தகத் துறைகளில் பொறுமை காக்கவும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். கல்வி பணிகளில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.

மிதுனம்

வர்த்தக முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். மனதளவில் தன்னம்பிக்கையுடன் எதையும் செய்ய முயல்வீர்கள்.

கடகம்

வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பலதரப்பட்ட விஷயங்களால் மனதில் அமைதியின்மை உண்டாகும்.

சிம்மம்

வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலை ஏற்படும்.

கன்னி

வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த மந்தநிலை விலகும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். மனதளவில் புதிய சிந்தனைகள் ஏற்படும். தனிப்பட்ட செயல்பாடுகளில் கவனம் வேண்டும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். 

துலாம்

புதிய வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிவீர்கள். சுப காரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உத்தியோகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும்.

விருச்சிகம்

செயல்பாடுகளில் ஒருவிதமான சுறுசுறுப்பின்மை உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும்.

தனுசு

வியாபார பணிகளில் சிறு மாறுதல்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். புதுவிதமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதுவிதமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

மகரம்

வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். தனித்திறமைகளை வளர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும்.

கும்பம்

சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் அகலும். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சுப காரியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.

மீனம்

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். செயல்பாடுகளில் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள். கல்விப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

டாபிக்ஸ்