Today Rasipalan (12.08.2024): வாரத்தின் முதல் நாள் உங்களுக்கு எப்படி?.. மேஷம் முதல் மீனம் வரை..இன்றைய ராசிபலன்கள் இதோ!-today rasipalan daily horoscope tamil astrological prediction for august 12 2024 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (12.08.2024): வாரத்தின் முதல் நாள் உங்களுக்கு எப்படி?.. மேஷம் முதல் மீனம் வரை..இன்றைய ராசிபலன்கள் இதோ!

Today Rasipalan (12.08.2024): வாரத்தின் முதல் நாள் உங்களுக்கு எப்படி?.. மேஷம் முதல் மீனம் வரை..இன்றைய ராசிபலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Aug 12, 2024 06:08 AM IST

Today RasiPalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 12) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (12.08.2024): வாரத்தின் முதல் நாள் உங்களுக்கு எப்படி?.. மேஷம் முதல் மீனம் வரை..இன்றைய ராசிபலன்கள் இதோ!
Today Rasipalan (12.08.2024): வாரத்தின் முதல் நாள் உங்களுக்கு எப்படி?.. மேஷம் முதல் மீனம் வரை..இன்றைய ராசிபலன்கள் இதோ!

மேஷம்

புதிய நபர்களின் அறிமுகங்களால் மாற்றம் ஏற்படும். வாகன பயணங்களில் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வது நல்லது. தேவையற்ற விவாதங்களை குறைத்துக்கொள்ளவும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும்.

ரிஷபம்

அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். தன வரவுகள் உண்டு. புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் நன்மை ஏற்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். நிர்வாக துறைகளில் திறமைகள் வெளிப்படும்.

மிதுனம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். சமூகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழ்நிலை உண்டாகும்.

கடகம்

நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்லவும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வரவுகளை மேம்படுத்த ஆலோசனைகள் கிடைக்கும்.

சிம்மம்

வியாபார பணிகளில் தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். கட்டிட துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இறை வழிபாடு தெளிவை ஏற்படுத்தும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். பணிகளில் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கன்னி

உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஒத்துழைப்பு கிடைக்கும். கமிஷன் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். வெளியூர் பயணம் சாதகமாக அமையும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடனிருப்பவர்களின் ஆதரவு மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள்.

துலாம்

தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தடைப்பட்ட தன வரவுகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில சுபச்செலவுகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

விருச்சிகம்

நண்பர்களின் ஆதரவால் நன்மை உண்டாகும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் அமையும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் மேம்படும்.

தனுசு

பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். விவசாய பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். புதிய வீடு மற்றும் மனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.

மகரம்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

கும்பம்

வெளிநாட்டு பயண வாய்ப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் விலகும். வாக்கு சாதுரியம் மூலம் தடைப்பட்ட சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும்.

மீனம்

அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள். இளைய உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வாகன பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். சாதகமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்