Today Rasipalan (11.08.2024): இந்த நாள் உங்களுக்கு எப்படி?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today RasiPalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 11) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today RasiPalan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். மாணவர்களுக்கு ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். புதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான சிந்தனைகள் மேம்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும்.
ரிஷபம்
தொழில் சார்ந்த முயற்சிகளில் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவும். புதிய நபர்களின் ஆதரவு மூலம் நட்பு வட்டாரம் விரிவடையும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் ஏற்படும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.
மிதுனம்
எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் இடத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பாக பிரிவினை தொடர்பான செயல்களில் விவேகம் வேண்டும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.
கடகம்
மனதில் தேவையற்ற வித்தியாசமான எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் உழைப்பிற்கு ஏற்ப முன்னேற்றங்கள் உண்டாகும். மனதில் கற்பனை சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் மாற்றங்களை செய்வீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.
சிம்மம்
குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களுடன் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்வது நல்லது. அரசு பணியில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். சக ஊழியர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கால்நடை வியாபாரத்தில் லாபம் மேம்படும்.
கன்னி
கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
துலாம்
புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தனவருவாயில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உங்களை பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம்
குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்ப்பது நல்லது. பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தந்திரமான சில விஷயங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திறமைக்கு உண்டான மதிப்பு தாமதமாக கிடைக்கும். ஆடம்பரமான சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும்.
தனுசு
கடன் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தொழில் ரீதியான பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும்.
மகரம்
பயணங்களின் மூலம் மேன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சுப காரியம் தொடர்பான நிகழ்ச்சிகள் கைகூடும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.
கும்பம்
பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மருத்துவம் சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். கால்நடை வளர்ப்பு பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
மீனம்
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ப அங்கீகாரம் கிடைக்கும். உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வாழ்க்கைத்துணையின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்