Today Rasipalan (07.08.2024): 'கவலை மறையும், வெற்றி கிடைக்கும்'..மேஷம் முதல் மீனம் வரை..உங்களுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today RasiPalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 07) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today RasiPalan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வழக்கு விஷயங்களில் புரிதல் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும்.
ரிஷபம்
கடன் பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார நிமித்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.
மிதுனம்
தொழில் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்ப்பது நல்லது. இணைய துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கவலை மறையும் நாள்.
கடகம்
உறவுகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். முக்கிய முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். புதிய மனை தொடர்பான செயல்களில் ஆர்வம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும்.
சிம்மம்
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சூழ்நிலை அறிந்து பேசுவது நன்மை உண்டாகும். பயணங்களின் மூலம் இன்பமான அனுபவம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும்.
கன்னி
அலைச்சல்களும் ஏற்படும். ஆன்மிக பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான செயல்களில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்
கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். மனதில் எண்ணிய ஆசைகள் நிறைவேறும். பிற மொழி பேசும் மக்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். திருத்தலம் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். நிர்வாக பணிகளில் திறமை வெளிப்படும்.
விருச்சிகம்
நண்பர்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உடனிருப்பவர்களின் மூலம் ஒத்துழைப்பு மேம்படும். போட்டி சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும்.
தனுசு
கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. விலை உயர்த்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும்.
மகரம்
கடன் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். வியாபார பணிகளில் போட்டிகள் அதிகரிக்கும். மற்றவர்கள் மூலம் எதிர்பார்த்த சில ஆதாயங்கள் தாமதமாக கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உதாசீன பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. சிக்கனம் வேண்டும்.
கும்பம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் மேம்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சகோதரர் வழியில் ஆதரவான சூழ்நிலை ஏற்படும்.
மீனம்
உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். மனதில் வியாபார நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்