Today Rasipalan (05.08.2024): வாரத்தின் முதல் நாள் எப்படி?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today RasiPalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 05) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today RasiPalan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
இன்றைய நாளில் மற்றவர்களின் பணிகளை சேர்த்து பார்க்கவேண்டிய சூழல் அமையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
ரிஷபம்
வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடினமான செயல்களையும் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மறைமுக திறமைகள் வெளிப்படும்.
மிதுனம்
பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். வாடிக்கையாளரின் ஒத்துழைப்பு மேம்படும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
சிம்மம்
குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். மனதை உறுத்திய சில விஷயங்களில் தெளிவான முடிவுகள் கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். கடன் சார்ந்த விஷயங்களில் நிதானம் அவசியம்.
கன்னி
தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணை வழியில் ஒத்துழைப்பு மேம்படும். உதவி கிடைக்கும்.
துலாம்
உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவீர்கள். விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு மேம்படும். அரசு பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கற்கும் திறனில் சில மாற்றங்கள் உண்டாகும். நேர்மைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும்.
விருச்சிகம்
உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் புதுவிதமான எண்ணங்களும், சிந்தனைகளும் பிறக்கும். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபார நிமித்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
தனுசு
புதிய நபர்களிடம் விழிப்புடன் செயல்படவும். தொழில் சார்ந்த சில நெருக்கடிகள் தோன்றி மறையும். பொன், பொருட்களை கையாள்வதில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். அரசு பணிகளில் தாமதங்கள் உண்டாகும். பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல் ஏற்படும்.
மகரம்
புதுவிதமான ஆடைகள் மீது ஆர்வம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கும்பம்
எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். இனிமையான பேச்சுக்கள் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
மீனம்
வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றமான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோக ரீதியான பொறுப்புகள் அதிகரிக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்