Today Rasipalan(04.08.2024):ஆடி அமாவாசையில் அதிர்ஷ்டம் யாருக்கு?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!
Today RasiPalan, Daily Horoscope: ஆடி அமாவாசை நாளான இன்று (ஆகஸ்ட் 04) மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today RasiPalan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 04 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 26, 2025 06:03 PMகுருபெயர்ச்சி பலன்: பண அதிர்ஷ்டம் இந்த ராசிகள் கதவை தட்டப்போகுது.. 2025-இல் மே குரு பெயர்ச்சி.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?
Mar 26, 2025 02:26 PMகீர்த்தி யோகம்: சனிப்பெயர்ச்சி 2025.. தலைகீழாக மாறப்போகும் ராசிகள் யார்?.. சனி குறித்து விட்டார்..!
Mar 26, 2025 11:17 AMரிஷபம், கும்பம், விருச்சிக ராசிக்கு அடிக்க போகுது ஜாக்பாட்.. சனி உதயத்தால் நல்ல நேரம் ஆரம்பம்.. பதவி உயர்வு கிடைக்கும்!
Mar 26, 2025 06:30 AMKetu Transit 2025: அந்த ராசிகளே தான்.. கேது பெயர்ச்சி.. அசுப கிரகம் தரும் யோக பலன்களை பெறும் ராசிகள்!
Mar 26, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : பணம் தேடி வரும் யோகம் உங்களுக்கா.. கவனமா இருங்க காரியம் முக்கியம்.. இன்று ஜாக்பாட் யாருக்கு பாருங்க!
Mar 25, 2025 04:04 PMவக்ர செவ்வாய்: நேராக வருகின்ற செவ்வாய்.. இனி வாழ்க்கை நேராக மாறும் ராசிகள்.. உங்க ராசி என்ன ராசி?
மேஷம்
செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வதற்கான தருணம் ஏற்படும். ஆவணங்களை கையாள்வதில் கவனம் தேவை. மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.
ரிஷபம்
முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிதுனம்
உத்தியோகப் பணிகளில் உங்கள் மீதான மதிப்பு மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தினை ஏற்படுத்தும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும்.
கடகம்
உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களை பெறுவீர்கள். உங்களை பற்றிய பலம் மற்றும் பலவீனங்களை புரிந்துகொள்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் குறித்த சிந்தனைகள் மேம்படும்.
சிம்மம்
மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். எண்ணிய சில பணிகள் நிறைவேறும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.
கன்னி
மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர்நிலை கல்வியில் மேன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
ஆடம்பரமான செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். அரசு பணிகளில் இழுபறியான சூழ்நிலை ஏற்படும். முயற்சிக்கேற்ப சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். கல்வியில் இருந்துவந்த குழப்பம் அகலும். வியாபாரம் தொடர்பான புதிய முதலீடுகள் மேம்படும்.
விருச்சிகம்
இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அலைச்சலும், அனுகூலமும் ஏற்படும். குழந்தைகளின் வழியில் ஆதாயம் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் புதுமையான சூழல் ஏற்படும்.
தனுசு
வாழ்க்கைத்துணையுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் வழியில் அலைச்சல் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். எளிமையான செயல்கள் கூட தாமதமாகி நிறைவு பெறும்.
மகரம்
மனதில் ஆன்மிக நாட்டம் உண்டாகும். நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள்.
கும்பம்
வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும்.
மீனம்
வியாபார பணிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்