Today Rasipalan (01.08.2024): மாதத்தின் முதல் நாள் யாருக்கு சாதகம்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள்..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (01.08.2024): மாதத்தின் முதல் நாள் யாருக்கு சாதகம்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள்..!

Today Rasipalan (01.08.2024): மாதத்தின் முதல் நாள் யாருக்கு சாதகம்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள்..!

Karthikeyan S HT Tamil
Published Aug 01, 2024 04:00 AM IST

Today RasiPalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 01) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (01.08.2024): மாதத்தின் முதல் நாள் யாருக்கு சாதகம்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள்..!
Today Rasipalan (01.08.2024): மாதத்தின் முதல் நாள் யாருக்கு சாதகம்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள்..!

இது போன்ற போட்டோக்கள்

மேஷம்

பிற மொழி பேசும் மக்கள் ஆதரவாக இருப்பார்கள். சூழ்நிலைக்கேற்ப பேசி தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பலதரப்பட்ட விஷயங்களால் மனதில் அமைதியின்மை உண்டாகும்.

ரிஷபம்

நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு மேம்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். சொத்துக்கள் விற்பது தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

மிதுனம்

மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். தடைபட்ட பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும்.

கடகம்

உறவினர்களின் உண்மை நிலைகளை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். செயல்பாடுகளில் சுதந்திர போக்கு மேம்படும். எதிர்பாராத சில விரயங்கள் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும்.

சிம்மம்

எண்ணங்களில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். இணைய துறைகளில் மாற்றம் ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

கன்னி

முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிலும் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிற மொழி சார்ந்த மக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். உத்தியோக ரீதியாக சாதகமான பலன்கள் கிடைக்கும்.

துலாம்

அனைவரிடத்திலும் அனுசரித்துச் செல்வதன் மூலம் மன அமைதி ஏற்படும். எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். விவசாயப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வழக்கு செயல்களில் பொறுமை வேண்டும். உத்தியோகப் பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். கடன் உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்

உடனிருப்பவர்கள் மூலம் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். எளிமையான பணிகளில் தாமதம் ஏற்படும். கலை பொருட்களில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். குழந்தைகளிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

தனுசு

உடனிருப்பவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மகரம்

இடம்பெயர்வது சார்ந்த சிந்தனைகள் ஏற்படும். புதுவிதமான அனுபவம் ஏற்படும். வாரிசுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.

கும்பம்

வரவுகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். எதிலும் உணர்வுபூர்வமாக செயல்படுவீர்கள். இலக்கியப் பணிகளில் கற்பனை வளம் மேம்படும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் ஏற்படும்.

மீனம்

பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் மறையும். உடனிருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9