இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று மார்ச் 24 உங்கள் பிரச்னைகள் குறையுமா?
இன்றைய ராசிபலன்: ஜோதிட கணக்கீடுகளின்படி, மார்ச் 24 ஆம் தேதியான இன்று துலாம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், யாரெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

இன்றைய ராசிபலன் 24.03.2025: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, மார்ச் 24 ஆம் தேதியான இன்று (திங்கள்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
இது போன்ற போட்டோக்கள்
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
May 11, 2025 07:00 AMகுரு சுக்கிரன் பலன்கள்: பணமழை கஜலட்சுமி யோகம்.. குரு சுக்கிரன் கொட்டி தீர்க்கும் ராசிகள்..!
May 11, 2025 04:45 AM'மேஷம் முதல் மீனம் வரை.. மே 11ஆம் தேதி எப்படி இருக்கப்போகிறது..’: 12 ராசிகளுக்கான பலன்கள்!
May 10, 2025 11:40 PMஇரு கிரகங்களின் சஞ்சாரம்.. உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்! வளர்ச்சி, நல்ல நேரத்தை அனுபவிக்கும் ராசிகள்
அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசியினரே பயண விஷயங்களில் மாற்றங்கள் உருவாகும். வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் சாதகமாகும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினரே உத்தியோக பணிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். சர்வதேச வணிகம் தொடர்பான பணிகளில் லாபங்கள் மேம்படும். கூட்டாளிகள் மூலம் பொருட்ச்சேர்க்கைகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புது விதமான அனுபவங்கள் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசியினரே தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனை தொடர்பான செயல்களில் ஆதாயம் ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் விவேகம் வேண்டும். தொழில் செயல்பாடுகளில் புதிய ஆலோசனைகள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியினரே எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அலைச்சல்கள் மூலம் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசியினரே உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். எண்ணிய பணிகளில் சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். புதுவிதமான சிந்தனைகள் மனதிலிருந்து வெளிப்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு அவசியம். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
மீனம் ராசி அன்பர்களே கலை நுட்பமான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். சில விஷயங்களில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்கள் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத பொறுப்புக்கள் மூலம் மதிப்புகள் மேம்படும். முயற்சி மேம்படும் நாள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
