துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூலை 19 உங்கள் ராசிக்கு சாதகமா? பாதகமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூலை 19 உங்கள் ராசிக்கு சாதகமா? பாதகமா?

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூலை 19 உங்கள் ராசிக்கு சாதகமா? பாதகமா?

Karthikeyan S HT Tamil
Published Jul 19, 2025 07:34 AM IST

ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜூலை 19 ஆம் தேதியான இன்று துலாம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், யாரெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூலை 19 உங்கள் ராசிக்கு சாதகமா? பாதகமா?
துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூலை 19 உங்கள் ராசிக்கு சாதகமா? பாதகமா?

இது போன்ற போட்டோக்கள்

அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம்

துலாம் ராசியினரே சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். சுப காரிய எண்ணங்கள் கைகூடும். பயணங்களால் அறிமுகங்கள் ஏற்படும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் ஆதரவுகள் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினரே வரவுகளில் இருந்து தாமதங்கள் விலகும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு காரியத்தில் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்த தடைகள் விலகும். வித்தியாசமான செயல்களால் பலரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசியினரே புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உறவுகள் வழியில் இருந்த வேறுபாடுகள் விலகும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தடைப்பட்ட சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். அலுவல் பணிகளில் கால தாமதம் ஏற்படும். இலக்கிய துறைகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். உணவு விஷயங்களில் திருப்தி இன்மை ஏற்படும்.

மகரம்

மகர ராசியினரே தொழில்நுட்ப கருவிகளால் விரயங்கள் ஏற்படும். நீண்ட நாள் முதலீடு விஷயங்களில் ஆலோசனை வேண்டும். மனை விற்பனையில் தாமதம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கிய மகிழ்வீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும்.

கும்பம்

கும்ப ராசியினரே மனதளவில் புதிய பொலிவுடன் செயல்படுவீர்கள். பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். அரசு துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பயணங்களால் நன்மை ஏற்படும். தனிப்பட்ட தேவைகள் நிறைவேறும். வியாபார ரீதியான பெரிய மனிதர்களின் அறிமுகங்கள் கிடைக்கும்.

மீனம்

மீன ராசியினரே குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். விலகி இருந்த உறவினர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். தன வரவுகளில் ஏற்ற இறக்கம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.