இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று மே 16 உங்களுக்கு சாதகமா? பாதகமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று மே 16 உங்களுக்கு சாதகமா? பாதகமா?

இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று மே 16 உங்களுக்கு சாதகமா? பாதகமா?

Karthikeyan S HT Tamil
Published May 16, 2025 05:46 AM IST

இன்றைய ராசிபலன்: ஜோதிட கணக்கீடுகளின்படி, மே 16 ஆம் தேதியான இன்று துலாம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று மே 16 உங்களுக்கு சாதகமா? பாதகமா?
துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று மே 16 உங்களுக்கு சாதகமா? பாதகமா?

இது போன்ற போட்டோக்கள்

அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம்

தனுசு ராசியினரே முயற்சிக்கு ஏற்ப வரவுகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். அரசுப் பணிகளில் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினரே ஆன்மிகப் பணியில் ஆர்வம் உண்டாகும். தடைப்பட்ட சில விஷயங்கள் நிறைவு பெறும். வீடு, மனை விற்பதில் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். உழைப்புக்கான மதிப்பு தாமதமாக கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசியினரே திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். தொலைதூர உறவினர்களின் சந்திப்பு உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளால் சிறு சிறு அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். துணைவரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள்.

மகரம்

மகர ராசியினரே மறைமுகமான சில விமர்சனங்கள் தோன்றி மறையும். நெருக்கமானவர்களின் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். கடின உழைப்பிற்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய பயணங்கள் உண்டாகும். சக ஊழியர்களால் சிறு சிறு வருத்தங்கள் நேரிடும்.

கும்பம்

கும்ப ராசியினரே எதையும் சமாளிக்கும் மனவலிமை உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கலை சார்ந்த பணிகளில் திறமைகள் வெளிப்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான உதவிகள் சாதகமாகும்.

மீனம்

மீன ராசியினரே செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குழந்தைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். பணி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும்.