துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூலை 15 உங்களுக்கு பலமா? பலவீனமா? - இன்றைய ராசிபலன்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூலை 15 உங்களுக்கு பலமா? பலவீனமா? - இன்றைய ராசிபலன்!

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூலை 15 உங்களுக்கு பலமா? பலவீனமா? - இன்றைய ராசிபலன்!

Karthikeyan S HT Tamil
Published Jul 15, 2025 08:14 AM IST

இன்றைய ராசிபலன்: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜூலை 15 ஆம் தேதியான இன்று துலாம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், யாரெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூலை 15 உங்களுக்கு பலமா? பலவீனமா? - இன்றைய ராசிபலன்!
துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூலை 15 உங்களுக்கு பலமா? பலவீனமா? - இன்றைய ராசிபலன்!

இது போன்ற போட்டோக்கள்

அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம்

துலாம் ராசியினரே கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்களால் புதிய அனுபவங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினரே திட்டமிட்ட பணிகள் தாமதமாகி முடிவு பெறும். உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். அரசு பணிகளில் இருந்த இழுப்பறிகள் குறையும். நெருக்கமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தந்தையின் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்புகள் மேம்படும்.

தனுசு

தனுசு ராசியினரே தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறப்புகளால் அலைச்சல்கள் உண்டாகும். பெரியவர்கள் இடத்தில் விவாதங்களை தவிர்க்கவும். தாயின் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். விளையாட்டுத் துறைகளில் அரசு உதவிகள் சாதகமாகும். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் பொறுமை வேண்டும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே பலதரப்பட்ட சிந்தனைகளால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். தந்தை வழியில் அனுசரித்து செல்லவும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். மறதி பிரச்சனைகள் விலகும். புதிய ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.

கும்பம்

கும்ப ராசியினரே மனதளவில் சிறுசிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களிடத்தில் பொறுமை வேண்டும். நண்பர்கள் வட்டத்தில் மதிப்புகள் மேம்படும். பழைய நினைவுகளால் செயல்களில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே நினைத்த சில பணிகளால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினரிடம் இருந்த வேறுபடுகள் குறையும். வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து செல்லவும். வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் சுதந்திர தன்மை அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மற்றும் தெளிவுகள் பிறக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.