இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஏப்ரல் 15 உங்களுக்கு சாதகமா? பாதகமா?
இன்றைய ராசிபலன்: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஏப்ரல் 15 ஆம் தேதியான இன்று துலாம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

இன்றைய ராசிபலன் 15.04.2025: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, ஏப்ரல் 15 ஆம் தேதியான இன்று (செவ்வாய்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 28, 2025 05:00 AMவெற்றி சாத்தியம்.. பணத்தை பத்திரம்.. கவனமா இருக்க வேண்டியது யார்.. இன்று ஏப்.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
Apr 26, 2025 11:26 AMபண கட்டிலில் படுத்து உருளும் ராசிகள்.. சூரியன் அஸ்வினியில் நுழைகிறார்.. தமிழ் புத்தாண்டு ராசிகள்!
அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துகளால் ஆதாயம் மேம்படும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே எதிர்பார்த்த சில காரியங்கள் தள்ளிப்போகும். திடீர் பயணம் உண்டாகும். எந்தவொரு செயலையும் செய்வதற்குமுன் யோசித்து மேற்கொள்வது நன்மையை தரும். அரசு வழியில் ஆதாயம் காண்பீர்கள். இணையம் சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். வாகன மாற்றம் சார்ந்த சிந்தனை மேம்படும்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். திடீர் பயணம் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்படும். நினைத்த பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்ப்புகளை சமாளிப்பதற்கான மனப்பக்குவம் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். முயற்சியில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும்.
மகரம்
மகர ராசி அன்பர்களே சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். பொதுவாழ்வில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். சட்டத்துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நேர்மறையான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
மீன ராசி அன்பர்களே நினைத்த சில பணிகள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். உடல் நிலையில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பிறருக்கு உதவும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். திடீர் செலவுகள் உண்டாகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
