இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று மார்ச் 14 உங்களுக்கு சாதகமா? பாதகமா?
இன்றைய ராசிபலன்: ஜோதிட கணக்கீடுகளின்படி, மார்ச் 14 ஆம் தேதியான இன்று துலாம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், யாரெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

இன்றைய ராசிபலன் 14.03.2025: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, மார்ச் 14 ஆம் தேதியான இன்று (வெள்ளிக்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 16, 2025 05:05 PMமார்ச் 17ஆம் தேதி துலாம் முதல் மீன ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!
Mar 16, 2025 04:07 PMமார்ச் 17ஆம் தேதி மேஷம் முதல் கன்னி ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!
Mar 16, 2025 02:55 PMமீனத்துக்குச் சென்ற சூரியன்.. பிற்போக்காக திரும்பிய புதன்.. சிக்கிய பணத்தை மீட்டு சிம்மாசனம் போட்டு அமரப்போகும் ராசிகள்
Mar 16, 2025 01:08 PMசூரியன் - புதன் - சுக்கிரன் சேர்க்கை.. படிப்படியாக லாபம் பெறும் மூன்று அதிர்ஷ்டக்கார ராசிகள்
Mar 16, 2025 10:43 AMமீன ராசியில் புதன் வக்ர நிலை.. தொழில் நெருக்கடியை அடித்து ஓட விடப்போகும் 3 ராசிகள்
Mar 16, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : பண மழையில் நனையும் அதிர்ஷ்டம் உங்கள் பக்கமா.. எச்சரிக்கையா இருக்க வேண்டியது யார் பாருங்க!
அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே பணி நிமித்தமான திடீர் மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். புதுவிதமான இலக்குகள் உண்டாகும். கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய முயற்சிகள் ஈடேறும். மனதில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் பிறக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் மூலம் மேன்மை உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கையும் துணிச்சலும் உண்டாகும்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே பேச்சுக்களால் ஆதாயம் உண்டாகும். புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் ஏற்படும். உழைப்புக்கு உண்டான முன்னேற்றம் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகள் மனம் அறிந்து செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசி அன்பர்களே நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். எதிலும் கொள்கை பிடிப்பு தன்மை அதிகரிக்கும். நிர்வாகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதையும் பாதுகாக்கும் திறன் மேம்படும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே மனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெளியூர் தொடர்பான கல்வி சார்ந்த உதவிகள் கிடைக்கும். பத்திரம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
மீனம்
மீனம் ராசி அன்பர்களே எண்ணிய சில பணிகளை அலைந்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தகவல் தொடர்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். மறைமுக போட்டிகளை சாமர்த்தியமாக வெற்றிக்கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
