இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஏப்ரல் 13 உங்களுக்கு எப்படி இருக்கு?
இன்றைய ராசிபலன்: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஏப்ரல் 13ஆம் தேதியான இன்று துலாம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், யாரெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, ஏப்ரல் 13ஆம் தேதியான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 28, 2025 02:30 PMஇந்த ராசிக்காரர்களுக்கு விரைவில் அதிர்ஷ்ட யோகம்.. நிதி ஆதாயங்கள், மன அமைதி கிடைக்கும்!
Apr 28, 2025 05:00 AMவெற்றி சாத்தியம்.. பணத்தை பத்திரம்.. கவனமா இருக்க வேண்டியது யார்.. இன்று ஏப்.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
துலாம் ராசி முதல் மீன ராசி வரை உங்களுக்கு எப்படி இருக்கு?
துலாம்:
துலாம் ராசியினரே, சகோதரர் வகையில் ஆதாயம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். குறைவாகப் பேசினாலும் குறை இல்லாமல் பேசவும். எதிலும் சிந்தித்து செயல்படவும். போட்டி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினரே, பிறமொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். மனதிற்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணம் சாதகமாக அமையும். சில முடிவுகளில் ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது. தொழில் சம்பந்தமான செயல்பாடுகளில் ஆதரவான சூழல் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.
தனுசு:
தனுசு ராசியினரே, உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றங்கள் ஏற்படும். சுபகாரியம் சார்ந்த பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். குழந்தைகளால் மதிப்பு அதிகரிக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : பாசநிறம்.
மகரம்:
மகர ராசியினரே, அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். மனதில் இனம்புரியாத சிந்தனைகள் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் ரீதியாக இருந்துவந்த தடைகள் விலகும். பரிசு கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
கும்பம்:
கும்ப ராசியினரே, அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். மேலதிகாரியுடன் இருந்துவந்த பிரச்னைகளை சரி செய்வீர்கள். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வருவாயில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். வியாபாரம் விருத்தி சார்ந்த முயற்சிகளை எடுப்பீர்கள். சிக்கல் மறையும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
மீனம்:
மீன ராசியினரே, செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். பங்கு வர்த்தகத்தில் புதிய அனுபவம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். உடன் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். அரசு பணிகளில் விவேகம் வேண்டும். நிதானம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வட மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

தொடர்புடையை செய்திகள்