இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஏப்ரல் 12 உங்களுக்கு எப்படி இருக்கு?
இன்றைய ராசிபலன்: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஏப்ரல் 12ஆம் தேதியான இன்று துலாம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், யாரெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, ஏப்ரல் 10 ஆம் தேதியான இன்று (வியாழக்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 18, 2025 01:26 PM'வியாபாரத்தில் நஷ்டம், வாழ்க்கைத்துணையுடன் மோதலுக்கு வாய்ப்பு': ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
Apr 18, 2025 01:20 PMராகு பெயர்ச்சி பலன்கள்: பணமழை கொட்டும் ராகு.. அதிர்ஷ்டமான ராசிகள்.. கும்பத்தில் யோகம் பிறக்குது!
Apr 18, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியினரே.. ஏப்ரல் 18, 2025 ல் உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 17, 2025 05:29 PMராகு பெயர்ச்சி பலன்கள்: பண மழை கொடுத்து தூக்க வரும் ராகு.. கோடிகளில் நனையும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா சொல்லுங்க?
Apr 17, 2025 05:01 PMநாளைய ராசிபலன்: வருமானம் அதிகரிக்கும், தன்னம்பிக்கை நிறைந்திருக்கும்.. இந்த ராசிகளுக்கு நாளை எப்படி இருக்கும்?
Apr 17, 2025 03:54 PMமே 7-ம் தேதி மேஷத்தில் புதன்.. புதாதித்ய ராஜ யோகத்தால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
துலாம் ராசி முதல் மீன ராசி வரை உங்களுக்கு எப்படி இருக்கு?
துலாம் ராசி: துலாம் ராசியினரே, தாயின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். சஞ்சலமான சிந்தனைகளால் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஏற்படும். வியாபாரம் அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். பொதுமக்களால் புதிய அனுபவங்கள் ஏற்படும். எதிர்பாராத சில பயணம் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும்.
விருச்சிக ராசி:
விருச்சிக ராசியினரே, குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். பெருந்தன்மையான செயல்களால் செல்வாக்கு அதிகரிக்கும். பணியிடங்களில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களால் லாபம் மேம்படும்.
தனுசு ராசி:
தனுசு ராசியினரே, மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். தொழில் ரீதியான புதிய ஒப்பந்தங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உடல்நிலையில் இருந்துவந்த சங்கடம் விலகும். கணவன், மனைவியிடையே புரிதல் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மகரம் ராசி:
மகரம் ராசியினரே, நண்பர்களுக்கிடையேயான நட்பு வட்டம் விரிவடையும். உறவுகளிடத்தில் பொறுமை வேண்டும். போட்டித்தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உறுதி மேம்படும் நாள்.
கும்பம் ராசி:
கும்ப ராசியினரே, நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் சுமுகமாக பழகவும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகளை சமாளிப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். விவேகம் வேண்டிய நாள்.
மீன ராசி:
மீன ராசியினரே, வருமானத்தை உயர்த்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் சார்ந்த தொடர்புகளில் கவனம் வேண்டும். நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும்.

தொடர்புடையை செய்திகள்