இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூன் 10 உங்களுக்கு சாதகமா? பாதகமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூன் 10 உங்களுக்கு சாதகமா? பாதகமா?

இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூன் 10 உங்களுக்கு சாதகமா? பாதகமா?

Karthikeyan S HT Tamil
Published Jun 10, 2025 06:34 AM IST

இன்றைய ராசிபலன்: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜூன் 10 ஆம் தேதியான இன்று துலாம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூன் 10 உங்களுக்கு சாதகமா? பாதகமா?
இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூன் 10 உங்களுக்கு சாதகமா? பாதகமா?

இது போன்ற போட்டோக்கள்

அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம்

துலாம் ராசியினரே வருவாய் குறித்த எண்ணங்கள் மேம்படும். தடைப்பட்ட சில வரவுகள் சாதகமாகும். கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பைத் தரும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த மந்த நிலைகள் விலகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினரே சிறுதூரப் பயணங்களால் மாற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் நெருக்கடிகள் உண்டாகும். மனதளவில் புதிய எண்ணங்கள் பிறக்கும். வியாபாரம் நிமித்தமான தேடல்கள் அதிகரிக்கும். கடன் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு ராசியினரே மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். புதிய வகை உணவுகளின் மீது ஆர்வம் உண்டாகும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். மனை சார்ந்த செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். கலைப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களுடனான வெளியூர் பயணங்களால் புதிய நம்பிக்கை உண்டாகும்.

மகரம்

மகர ராசியினரே இழுபறியான வரவுகள் கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். வழக்குகளில் மாற்றங்கள் ஏற்படும்.

கும்பம்

கும்ப ராசியினரே அனுபவ செயல்களால் நட்பு வட்டம் விரிவடையும். உடன்பிறந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலப் பயணங்கள் கைகூடும். சமூகப் பணிகளில் ஆதரவு மேம்படும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். எதிர்காலம் சார்ந்த சில பணிகளை மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் இருந்துவந்த தடைகள் குறையும்.

மீனம்

மீன ராசியினரே எதிர்பாராத வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். விதண்டாவாதப் பேச்சுக்களைத் தவிர்க்கவும். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.