இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று மே 09 உங்களுக்கு சாதகமா? பாதகமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று மே 09 உங்களுக்கு சாதகமா? பாதகமா?

இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று மே 09 உங்களுக்கு சாதகமா? பாதகமா?

Karthikeyan S HT Tamil
Published May 09, 2025 06:27 AM IST

இன்றைய ராசிபலன்: ஜோதிட கணக்கீடுகளின்படி, மே 09 ஆம் தேதியான இன்று துலாம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று மே 09 உங்களுக்கு சாதகமா? பாதகமா?
இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று மே 09 உங்களுக்கு சாதகமா? பாதகமா?

இது போன்ற போட்டோக்கள்

அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். வாகனம் தொடர்பான பயணங்களில் விவேகம் வேண்டும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுகமான சில தடைகள் ஏற்பட்டு நீங்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். சொத்து சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மறைமுகமான தடைகளை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே வியாபாரத்தில் இருந்துவந்த மந்த நிலை குறையும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கனிவான பேச்சுகள் ஆதரவை மேம்படுத்தும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.

மகரம்

மகர ராசி அன்பர்களே உடன்பிறந்தவர்களின் இடத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். அலுவலகத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். நெருக்கமானவர்களுடன் சிறு தூரப் பயணம் சென்று வருவீர்கள். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். புதிய நபர்களிடம் விழிப்புணர்வு வேண்டும். இனம்புரியாத சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு ஏற்படும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் ஏற்படும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.