இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூன் 05 உங்களுக்கு சாதகமா? பாதகமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூன் 05 உங்களுக்கு சாதகமா? பாதகமா?

இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூன் 05 உங்களுக்கு சாதகமா? பாதகமா?

Karthikeyan S HT Tamil
Published Jun 05, 2025 06:00 AM IST

இன்றைய ராசிபலன்: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜூன் 05 ஆம் தேதியான இன்று துலாம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூன் 05 உங்களுக்கு சாதகமா? பாதகமா?
இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூன் 05 உங்களுக்கு சாதகமா? பாதகமா?

இது போன்ற போட்டோக்கள்

அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம்

துலாம் ராசியினரே குழந்தைகளை அரவணைத்து செல்லவும். செயல்பாடுகளால் ஒருவிதமான அசதிகள் தோன்றி மறையும். சக ஊழியர்களால் வருத்தங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்புகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டத்தின் மதிப்பு உயரும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் முக்கியத்துவம் அதிகரிக்கும். வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு ராசியினரே பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். புனிதப் பயணம் சார்ந்த வாய்ப்புகள் கைகூடும். மருத்துவத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் இடத்தில் பொறுமை வேண்டும். மறைமுகமான சில வருமானங்கள் மேம்படும். எதிர்கால முதலீடு குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும்.

மகரம்

மகர ராசியினரே வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் ஒத்துழைப்பு உண்டாகும். ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் புரிதல் ஏற்படும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை அறிவீர்கள். கடன் நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசியினரே பயணங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். இனம்புரியாத சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். செயல்களில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். சகோதரர்களுக்குள் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தையிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆராய்ச்சிப் பணிகளில் விவேகம் வேண்டும்.

மீனம்

மீன ராசியினரே வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சமூகப் பணிகளில் மதிப்பு உயரும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.