இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூன் 03 உங்களுக்கு சாதகமா? பாதகமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூன் 03 உங்களுக்கு சாதகமா? பாதகமா?

இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூன் 03 உங்களுக்கு சாதகமா? பாதகமா?

Karthikeyan S HT Tamil
Published Jun 03, 2025 06:15 AM IST

இன்றைய ராசிபலன்: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜூன் 03 ஆம் தேதியான இன்று துலாம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூன் 03 உங்களுக்கு சாதகமா? பாதகமா?
இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூன் 03 உங்களுக்கு சாதகமா? பாதகமா?

இது போன்ற போட்டோக்கள்

அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம்

துலாம் ராசியினரே வியாபாரப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். உறவுகள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். விவாதங்களில் சாதகமான முடிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினரே சில நிகழ்வுகளால் மனதில் மாற்றம் ஏற்படும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடும். முத்திரைப் பணிகளில் சற்று விவேகம் வேண்டும். அரசு தொடர்பான விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். மற்றவர்களின் தேவையை நிறைவேற்றி வைப்பீர்கள்.

தனுசு

தனுசு ராசியினரே எதிர்மறையான சிந்தனைகள் மனதில் மேம்படும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். மற்றவர்களை நம்பி செயல்படுவதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும்.

மகரம்

மகர ராசியினரே நினைத்த காரியங்களில் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத சில வாய்ப்புகள் அமையும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வேலையாட்களின் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படவும். உயர் அதிகாரிகளால் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும்.

கும்பம்

கும்ப ராசியினரே சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் ஆதாயம் ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். மனதளவில் தெளிவு ஏற்படும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள்.

மீனம்

மீன ராசியினரே மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உறவுகளின் இடத்தில் பொறுமை வேண்டும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். முதலீடு செய்வதற்கான ஆலோசனைகள் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.