இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூன் 02 ஏற்றம், மாற்றம் யாருக்கு ?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூன் 02 ஏற்றம், மாற்றம் யாருக்கு ?

இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூன் 02 ஏற்றம், மாற்றம் யாருக்கு ?

Karthikeyan S HT Tamil
Published Jun 02, 2025 07:54 AM IST

இன்றைய ராசிபலன்: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜூன் 02 ஆம் தேதியான இன்று துலாம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூன் 02 ஏற்றம், மாற்றம் யாருக்கு ?
இன்றைய ராசிபலன்: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று ஜூன் 02 ஏற்றம், மாற்றம் யாருக்கு ?

இது போன்ற போட்டோக்கள்

அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம்

துலாம் ராசியினரே குடும்பத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பேச்சுக்களுக்கு மதிப்பு உண்டாகும். இறை வழிபாடு சார்ந்த பயணங்கள் கைகூடும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதுவிதமான ஆசைகள் பிறக்கும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினரே பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உறவுகளின் வழியில் ஆதாயம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை தரும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் செல்வாக்கு அதிகரிக்கும். மருத்துவப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வீடு, வாகனங்களை சீர் செய்வீர்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

தனுசு

தனுசு ராசியினரே பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் லாபம் அடைவீர்கள். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் மறையும்.

மகரம்

மகர ராசியினரே சிந்தனைகளில் கவனம் வேண்டும். அரசு வழி காரியங்களில் பொறுமை வேண்டும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். சமூகம் தொடர்பான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். அலுவலகத்தில் மற்றவர்கள் பணிகளையும் பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசியினரே திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். சுப நிகழ்ச்சிகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். தந்திரமான சில விஷயங்களால் லாபத்தை உண்டாக்குவீர்கள். அதிகாரிகளிடத்தில் உங்களின் முக்கியத்துவம் மேம்படும்.

மீனம்

மீன ராசியினரே வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசவும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் விவேகம் வேண்டும். திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடலில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.