Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று பிப்.08 உங்களுக்கு லாபகரமான நாளாக அமையுமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று பிப்.08 உங்களுக்கு லாபகரமான நாளாக அமையுமா?

Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று பிப்.08 உங்களுக்கு லாபகரமான நாளாக அமையுமா?

Karthikeyan S HT Tamil
Published Feb 08, 2025 05:52 AM IST

Today Rasipalan: ஜோதிட கணக்கீடுகளின்படி, பிப்ரவரி 08 ஆம் தேதியான இன்று துலாம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று பிப்.08 உங்களுக்கு லாபகரமான நாளாக அமையுமா?
துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று பிப்.08 உங்களுக்கு லாபகரமான நாளாக அமையுமா?

இது போன்ற போட்டோக்கள்

அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம்

வியாபாரத்தில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். சுபகாரிய முயற்சிகள் ஈடேறும். குழந்தைகளின் மேற்படிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். கற்பனைத் திறன் மேம்படும். மறதி பிரச்சனைகள் குறையும். செல்வச்சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்

பணிகளில் திறமைக்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் அவசரப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். வெளி வட்டாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். வரவேண்டிய வரவுகள் தாமதமாக கிடைக்கும். இழுபறியான சில பணிகள் நிறைவு பெறும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

தனுசு

உடன் பிறந்தவர்கள் மூலம் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். புதிய அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். தந்தை வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

மகரம்

நெருக்கமானவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். மனை விற்பனையில் இழுபறியான சூழல் உண்டாகும். புதிய வாகனம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். வழக்கு செயல்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

கும்பம்

மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். உயர்கல்வி குறித்த சிந்தனை மேம்படும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். வேலையாட்கள் மாற்றத்தில் நிதானம் வேண்டும். உத்தியோகத்தில் அலைச்சல்கள் ஏற்படும். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். சிற்றின்ப செயல்களில் ஆர்வம் ஏற்படும். போட்டி பந்தயங்களில் கவனத்துடன் செயல்படவும்.

மீனம்

பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் சார்ந்த பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.