இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று மார்ச் 24 உங்கள் கவலைகள் மறையுமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று மார்ச் 24 உங்கள் கவலைகள் மறையுமா?

இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று மார்ச் 24 உங்கள் கவலைகள் மறையுமா?

Karthikeyan S HT Tamil
Published Mar 24, 2025 05:15 AM IST

இன்றைய ராசிபலன்: ஜோதிட கணக்கீடுகளின்படி, மார்ச் 24 ஆம் தேதியான இன்று மேஷம் முதல் கன்னி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், யாரெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று மார்ச் 24 உங்கள் கவலைகள் மறையுமா?
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று மார்ச் 24 உங்கள் கவலைகள் மறையுமா?

இது போன்ற போட்டோக்கள்

அந்தவகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகள் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். விவேகமான செயல்பாடுகள் மூலம் பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் தன உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே பிரச்னைகளுக்குத் தீர்வுகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடையே அனுசரித்துச் செல்லவும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். தொழிலில் இருந்துவந்த முடக்க நிலைகள் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே நினைத்த காரியங்களில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். வியாபார பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத பயணங்கள் மூலம் உடல் சோர்வு உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும்.

கடகம்

கடக ராசியினரே வாழ்க்கை துணைவரின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உருவாகும். செயல்பாடுகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். பிடித்த பொருட்களை வாங்கி முடிப்பீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசியினரே ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். செயல்பாடுகளில் புதிய மாற்றங்கள் பிறக்கும். எந்த ஒரு செயலிலும் சோர்வின்றி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சந்தேக உணர்வுகளை தவிர்த்து சரியான முடிவுகளை எடுப்பீர்கள்.

கன்னி

கன்னி ராசியினரே மனதிற்கு பிடித்த விதத்தில் புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். தனவரவுகள் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் ஏற்படும். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உருவாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Karthikeyan S

TwittereMail
சு.கார்த்திகேயன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். வானொலி, டிஜிட்டல் ஊடகங்களில் 13+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், பொழுதுபோக்கு, ஆன்மிகம், லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் இளங்கலை தகவல் தொழில்நுட்பம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றுள்ள இவர், கல்வி வானொலி ஞானவாணி, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா தமிழ், டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner