மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜூலை 18 உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜூலை 18 உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் பாருங்க!

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜூலை 18 உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் பாருங்க!

Karthikeyan S HT Tamil
Published Jul 18, 2025 06:35 AM IST

ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜூலை 18 ஆம் தேதியான இன்று மேஷம் முதல் கன்னி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், யாரெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜூலை 18 உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் பாருங்க!
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜூலை 18 உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் பாருங்க!

இது போன்ற போட்டோக்கள்

அந்தவகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசியினரே ஆன்மிக பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எண்ணங்களின் போக்கில் மாற்றம் ஏற்படும். சமூகப் பணிகளில் செல்வாக்குகள் உயரும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியினரே எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளை அரவணைத்து செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். வியாபார போட்டிகளில் பொறுமையை கையாளவும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

மிதுனம்

மிதுன ராசியினரே குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கலைப் பொருட்களால் லாபம் ஏற்படும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முதுநிலை கல்வியில் இருந்த தாமதங்கள் விலகும். மறைமுக எதிர்ப்புகளை தெளிவாக புரிந்து கொள்வீர்கள். நாவல் மற்றும் இலக்கியங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும்.

கடகம்

கடக ராசியினரே அனுபவப் பூர்வமான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். சில பிரச்சனைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். உறவுகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை தரும். பிரியமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். அலுவலகப் பணிகளில் மதிப்புகள் உயரும். முயற்சிகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில வரவுகள் கிடைக்கும். வியாபார விஷயங்களில் விவேகம் வேண்டும். உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். சில அனுபவங்கள் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். சமூக பணிகளில் மேன்மை ஏற்படும்.

கன்னி

கன்னி ராசியினரே குடும்பத்தில் சிறு சிறு வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் திருப்தியின்மையான சூழல்கள் அமையும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய நபர்களிடம் விவேகத்துடன் செயல்படவும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பயணங்கள் சார்ந்த செயல்களில் விழிப்புணர்வு வேண்டும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.