இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஏப்ரல் 15 ஏற்றம், மாற்றம் யாருக்கு ?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஏப்ரல் 15 ஏற்றம், மாற்றம் யாருக்கு ?

இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஏப்ரல் 15 ஏற்றம், மாற்றம் யாருக்கு ?

Karthikeyan S HT Tamil
Published Apr 15, 2025 05:16 AM IST

இன்றைய ராசிபலன்: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஏப்ரல் 15 ஆம் தேதியான இன்று மேஷம் முதல் கன்னி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், யாரெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஏப்ரல் 15 ஏற்றம், மாற்றம் யாருக்கு ?
இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஏப்ரல் 15 ஏற்றம், மாற்றம் யாருக்கு ?

இது போன்ற போட்டோக்கள்

அந்தவகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசியினரே முயற்சியில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடியால் சங்கடம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சூழ்நிலையைப் புரிந்து அதற்கேற்ப செயல்படவும். செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பார்ப்பு தாமதமாக நிறைவேறும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நேர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் குறையும். வியாபாரத்தில் புதிய அறிமுகங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் அமைதியான சூழல் உண்டாகும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்ப்புகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வருமானம் தேவைக்கு போதுமானதாக இருக்கும். வாகனப் பராமரிப்பில் கவனம் வேண்டும். அரசு வழியில் எதிர்பார்த்த காரியம் கைகூடும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பற்றற்ற தன்மை உண்டாகும். நுட்பமான விஷயங்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். தன வரவுகள் திருப்தியாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் குறையும். சுபகாரியம் தொடர்பான செயல்களில் தாமதம் உண்டாகும். உறவினர்களின் உதவியால் பிரச்சனைகள் ஓரளவு குறையும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே வியாபாரத்தில் புதிய பாதைகள் புலப்படும். எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் சாமர்த்தியம் ஏற்படும். எதிர்பாராத வரவு வந்து சேரும். மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த நெருக்கடி விலகும். வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Karthikeyan S

TwittereMail
சு.கார்த்திகேயன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். வானொலி, டிஜிட்டல் ஊடகங்களில் 13+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், பொழுதுபோக்கு, ஆன்மிகம், லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் இளங்கலை தகவல் தொழில்நுட்பம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றுள்ள இவர், கல்வி வானொலி ஞானவாணி, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா தமிழ், டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner