இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று மார்ச் 14 யாருக்கு தடுமாற்றம் ஏற்படும்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று மார்ச் 14 யாருக்கு தடுமாற்றம் ஏற்படும்?

இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று மார்ச் 14 யாருக்கு தடுமாற்றம் ஏற்படும்?

Karthikeyan S HT Tamil
Published Mar 14, 2025 05:29 AM IST

இன்றைய ராசிபலன்: ஜோதிட கணக்கீடுகளின்படி, மார்ச் 14 ஆம் தேதியான இன்று மேஷம் முதல் கன்னி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், யாரெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று மார்ச் 14 யாருக்கு தடுமாற்றம் ஏற்படும்?
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று மார்ச் 14 யாருக்கு தடுமாற்றம் ஏற்படும்? (Image: Canva)

இது போன்ற போட்டோக்கள்

அந்தவகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசியினரே இன்று உங்களுக்கு எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நிர்வாகப் பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். தன வரவுகள் அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு சிக்கலான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதுவிதமான தைரியம் பிறக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியினரே வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் மேம்படும். சில மாற்றங்கள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே இனம் புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்படும். முன் கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசு சார்ந்த பணிகளில் விவேகத்துடன் இருக்கவும். உடன் பிறந்தவர்கள் வழியில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் அசதிகள் உண்டாகும். மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் அலட்சியம் இன்றி செயல்படவும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் இன்னல்களை தவிர்க்க முடியும். முக்கியமான கோப்புகளில் கவனம் வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே உத்தியோகப் பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல்கள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மனதிற்கு நம்பிக்கையை தரும். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உறவினர்களைப் பற்றிய புரிதல்கள் ஏற்படும். பயனற்ற செலவுகளை தவிர்ப்பீர்கள். வியாபார பணிகளில் விவேகத்துடன் செயல்படவும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். அரசு பணிகளில் அனுகூலம் உண்டாகும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும்.  உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.