இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் கன்னி ராசி வரை.. தமிழ் புத்தாண்டு நாளில் இன்று உங்களுக்கு எப்படி இருக்கும்?
இன்றைய ராசிபலன்: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஏப்ரல் 14 ஆம் தேதியான இன்று மேஷம் முதல் கன்னி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், யாரெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

இன்றைய ராசிபலன் 14.04.2025: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, ஏப்ரல் 14 ஆம் தேதியான இன்று (திங்கட்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 30, 2025 10:54 PMமேஷ ராசியில் புதன் - சூரியன் இணைவு.. உருவாகும் புதாத்திய ராஜயோகம்! செல்வாக்கு, பொருள் சேர்க்கை பெறும் ராசிகள்
Apr 30, 2025 05:33 PMபாக்கியங்களை அள்ளிக் கொட்ட வரும் குரு.. மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ராசிகள்.. பணக்கார யோகம் யாருக்கு?
Apr 30, 2025 01:58 PMகங்கா சப்தமி நாளில் உருவாகும் திரிபுஷ்கர, ரவி யோகம்.. வருமானம், நிதி நிலை மேம்பாடு பெறப்போகும் 5 ராசிகள் இதோ
Apr 30, 2025 10:15 AMகோடிகளில் நனைய போகும் ராசிகள்.. செல்வத்தால் நிரப்பப்போகும் குரு.. வந்துவிட்டது யோகம்!
Apr 30, 2025 07:30 AMகூரைய பிச்சுகிட்டு கொட்டும் பணமழை.. சூரியன் வேலை ஆரம்பம்.. 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?
Apr 30, 2025 05:00 AMஅட்சய திருதியையில் அதிர்ஷ்டம் யாருக்கு.. இன்று ஏப்.30, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா.. ஜாக்பாட் யாருக்கு பாருங்க!
அந்தவகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசியினரே மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் வர்த்தகம் சார்ந்த பணிகளில் புதிய அறிமுகம் ஏற்படும். சுற்றுவட்டாரத்தில் நல்ல புகழ் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசியினரே ஆன்மிகம் சார்ந்த திருப்பணிகளில் ஆர்வம் ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். சமூகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மனதை உருத்திய சில கவலைகள் குறையும்.
மிதுனம்
மிதுன ராசியினரே அரசுவழி தொடர்பான செயல்களில் பொறுமை கடைப்பிடிக்க வேண்டும். உறவினர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோர்களின் ஆலோசனை நன்மையைத் தரும். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் அகலும். விலகிச் சென்றவர்களைப் பற்றிய சிந்தனைகள் மேம்படும்.
கடகம்
கடக ராசியினரே அரசு தொடர்பான விவகாரங்களில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியினரே உடல் ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கவனம் வேண்டும். நெருங்கியவர்களால் அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனம் சாதகமாகும். திட்டமிட்ட பணிகளை மாற்றியமைப்பீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல்கள் உண்டாகும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். சமூகம் சார்ந்த நிகழ்வுகளால் புதிய அனுபவம் ஏற்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
