இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஏப்ரல் 13 உங்களுக்கு எப்படி இருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஏப்ரல் 13 உங்களுக்கு எப்படி இருக்கு?

இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஏப்ரல் 13 உங்களுக்கு எப்படி இருக்கு?

Marimuthu M HT Tamil Published Apr 13, 2025 05:58 AM IST
Marimuthu M HT Tamil
Published Apr 13, 2025 05:58 AM IST

இன்றைய ராசிபலன்: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஏப்ரல் 13ஆம் தேதியான இன்று மேஷம் முதல் கன்னி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், யாரெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஏப்ரல் 13 உங்களுக்கு எப்படி இருக்கு?
இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஏப்ரல் 13 உங்களுக்கு எப்படி இருக்கு?

இது போன்ற போட்டோக்கள்

அந்தவகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிக்கான பலன்கள்:

மேஷம்:

மேஷ ராசியினரே கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். திறமைகள் மூலம் மதிப்பு உயரும். வியாபாரம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். வெளிவட்டத்தில் கௌரவம் மேம்படும். கமிஷன் துறைகளில் ஆதாயம் அடைவீர்கள். தொல்லை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 2

💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

ரிஷபம்:

ரிஷப ராசியினரே, உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சொத்து வழக்குகளில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். உத்தியோகம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். நினைத்த காரியம் நிறைவேறும். உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.

மிதுனம்:

மிதுன ராசியினரே, சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். உழைப்புக்கேற்ப அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். வெளியூர் தொடர்பான பயணம் மூலம் மேன்மை உண்டாகும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். செலவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

கடகம்:

கடக ராசியினரே, விலகிச்சென்ற உறவுகள் தேடி வருவார்கள். அரசு வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மறதியால் அலைச்சல் உண்டாகும். சுபகாரியம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறுவதில் தாமதம் ஏற்படும். விமர்சன பேச்சுக்களைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் இருந்துவந்த மறைமுகமான எதிர்ப்புகள் நீங்கும். பாராட்டு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 1

💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

சிம்மம்:

சிம்ம ராசியினரே, ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பிள்ளைகளின் நலன்கருதி எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாகன பழுதுகளைச் சரிசெய்யும் எண்ணம் ஏற்படும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். தெளிவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

கன்னி:

கன்னி ராசியினரே, வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். பழகும் விதங்களின் மூலம் ஆதாயத்தை உருவாக்கிக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். மேன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, சீஃப் கன்டென்ட் எடிட்டராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 11+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, சினிமா, ஜோதிடம், லைஃப்ஸ்டைல், தேசம்-உலகம், கிரிக்கெட் உள்ளிட்டப் பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் கட்டுரைகளை எழுதி வருகிறார். சிவகங்கையிலுள்ள பண்ணை பொறியியல் கல்லூரியில் எம்.இ- ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் மற்றும் தென்காசி - புளியங்குடியிலுள்ள எஸ்.வி.சி.பொறியியல் கல்லூரியில் பி.இ - சிவில் இன்ஜினியரிங்கும் படித்திருக்கிறார். விகடன், மின்னம்பலம்,காவேரி நியூஸ் டிவி, நியூஸ்ஜே டிவி, ஈடிவி பாரத் ஆகிய ஊடகங்களைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விகடனின் தலைசிறந்த மாணவப்பத்திரிகையாளர் 2014-15ஆக விருதுபெற்றவர். இவரது சொந்த ஊர் வடுகபட்டி, தேனி மாவட்டம் ஆகும்.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்