இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஏப்ரல் 12 உங்களுக்கு எப்படி இருக்கு?
இன்றைய ராசிபலன்: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஏப்ரல் 12ஆம் தேதியான இன்று மேஷம் முதல் கன்னி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், யாரெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, ஏப்ரல் 12 ஆம் தேதியான இன்று (சனிக்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 28, 2025 02:30 PMஇந்த ராசிக்காரர்களுக்கு விரைவில் அதிர்ஷ்ட யோகம்.. நிதி ஆதாயங்கள், மன அமைதி கிடைக்கும்!
Apr 28, 2025 05:00 AMவெற்றி சாத்தியம்.. பணத்தை பத்திரம்.. கவனமா இருக்க வேண்டியது யார்.. இன்று ஏப்.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
அந்தவகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க: Akshaya Tritiya: அட்சய திருதியன்று லட்சுமி கடாட்சம் பெற வேண்டுமா? இந்த பொருட்களை வாங்க மறக்காதீங்க!
மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிக்கான பலன்கள்:
மேஷ ராசி:
மேஷ ராசியினருக்கு உடலில் இருந்துவந்த பிரச்னைகள் நீங்கும். கமிஷன் தொடர்பான பணிகளில் லாபம் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த வழக்குகள் முடிவுக்கு வரும். எதிர்ப்புகள் படிப்படியாக விலகும். கால்நடை வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்னைகள் சரியாகும்.
ரிஷபம் ராசி:
ரிஷப ராசியினருக்கு, விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். புதிய முதலீடுகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். சிந்தனைகளின் போக்கில் குழப்பமும், தெளிவின்மையும் காணப்படும். தந்தைவழி உறவுகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.
மிதுன ராசி:
மிதுன ராசியினருக்கு, குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சுற்றி இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனை விற்பனையில் முன்னேற்றம் ஏற்படும். அதிரடியாக ஒரு முடிவை எடுப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் நண்பர்களின் வழியில் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகளில் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும்.
கடக ராசி:
கடக ராசியினருக்கு, உடலில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கிப் புத்துணர்ச்சி பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு மாறுபட்ட முறையில் தீர்வு கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களில் கவனம் வேண்டும். தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். பத்திர வழியில் ஆதாயம் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களின் வார்த்தைகள் மீதான மதிப்பு அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும்.
சிம்ம ராசி:
சிம்ம ராசியினருக்கு, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். வியாபாரம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த மந்தத் தன்மை குறையும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். சிறு, குறுந்தொழிலில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். உத்தியோகப் பணிகளில் திறமைக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி ராசி:
கன்னி ராசியினருக்கு, பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்துகொள்ளவும். மறைமுகமான எதிர்ப்புகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும்.

தொடர்புடையை செய்திகள்