இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜூன் 10 உங்களுக்கு அதிர்ஷ்டம் எப்படி?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜூன் 10 உங்களுக்கு அதிர்ஷ்டம் எப்படி?

இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜூன் 10 உங்களுக்கு அதிர்ஷ்டம் எப்படி?

Karthikeyan S HT Tamil
Published Jun 10, 2025 06:26 AM IST

இன்றைய ராசிபலன்: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜூன் 10 ஆம் தேதியான இன்று மேஷம் முதல் கன்னி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜூன் 10 உங்களுக்கு அதிர்ஷ்டம் எப்படி?
இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஜூன் 10 உங்களுக்கு அதிர்ஷ்டம் எப்படி?

இது போன்ற போட்டோக்கள்

அந்தவகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசியினரே சமூகப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். பயனற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். நீண்ட தூரப் பயணங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசியினரே சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். புதிய நபர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். வியாபாரத்தில் லாபம் மேம்படும்.

மிதுனம்

மிதுன ராசியினரே குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றம் பிறக்கும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல்கள் அமையும். பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகனப் பழுதுகளைச் சரி செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும்.

கடகம்

கடக ராசியினரே மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு உண்டாகும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கித் தெளிவு கிடைக்கும். புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த சஞ்சலங்கள் விலகும்.

சிம்மம்

சிம்ம ராசியினரே வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் சாதகமான சூழல் அமையும். புதிய வியாபாரம் நிமித்தமான கடன் சார்ந்த உதவிகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் உற்சாகத்தைத் தரும். உத்தியோகம் நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசியினரே பயணங்களின் மூலம் அனுபவங்கள் அதிகரிக்கும். சவாலான காரியங்களில் ஈடுபட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். எண்ணங்களில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கிப் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்பு ஏற்படும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.