Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜன.22 ஏற்றம், மாற்றம் ஜாக்பாட் யாருக்கு ?.. 12 ராசிக்கான பலன்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜன.22 ஏற்றம், மாற்றம் ஜாக்பாட் யாருக்கு ?.. 12 ராசிக்கான பலன்கள் இதோ!

Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜன.22 ஏற்றம், மாற்றம் ஜாக்பாட் யாருக்கு ?.. 12 ராசிக்கான பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Jan 22, 2025 06:39 AM IST

Today Rasipalan 22.01.2025: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 22 ஆம் தேதியான இன்று (புதன்கிழமை) மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜன.22 ஏற்றம், மாற்றம் ஜாக்பாட் யாருக்கு ?.. 12 ராசிக்கான பலன்கள் இதோ!
Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜன.22 ஏற்றம், மாற்றம் ஜாக்பாட் யாருக்கு ?.. 12 ராசிக்கான பலன்கள் இதோ!

மேஷம்

மேஷம் ராசியினருக்கு மனைவி வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் நன்மைகள் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். போட்டிப்பந்தயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்

ரிஷபம் ராசி அன்பர்களே உயர் அதிகாரிகள் மூலம் சில விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும். உத்தியோகப் பணிகளில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணம் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்துச் செல்லவும்.

கடகம்

கடக ராசியினரே மனதளவில் சிறுசிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். தெளிவற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். தற்பெருமை பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சவாலான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும்.

சிம்மம்

சிம்மம் ராசியினரே உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். காலில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். விமர்சனங்களால் சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே மனதில் ஏதோ இனம்புரியாத சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வழக்கு விஷயங்களில் பொறுமையை கையாளவும். நெருக்கமானவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும்.

துலாம்

துலாம் ராசியினரே அதிகார பணிகளில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வித்தியாசமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினரே சிந்தனை திறன் மேம்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செயல்படவும். திட்டமிட்ட காரியம் நிறைவேறும். வெளிநாட்டு வர்த்தக பணிகளில் நன்மைகள் உண்டாகும். மனதில் புதிய தேடல்கள் பிறக்கும்.

தனுசு

தனுசு ராசியினரே உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களிடமிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும்.

மகரம்

மகரம் ராசியினரே மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் செயல்படுவது நல்லது. வியாபார பணிகளில் கனிவு வேண்டும். சிக்கலான சில சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள். உடல்நலத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். உறவுகள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

கும்பம்

கும்பம் ராசியினரே எதிர்பார்த்த சில வரவுகள் தாமதமாக கிடைக்கும். வியாபார பணிகளில் வேலை ஆட்களால் விரயங்கள் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகளால் மன வருத்தங்கள் நேரிடலாம். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

மீனம்

மீனம் ராசியினரே சிந்தனைகளில் புதுமைகள் பிறக்கும். அதிகாரப் பொறுப்புக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். குழந்தைகளால் மதிப்புகள் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்