Today Rashi Palan (30.08.2024): ஆவணி வெள்ளி உங்களுக்கு எப்படி?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!-today rashi palan daily horoscope tamil astrological prediction for 30 august 2024 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rashi Palan (30.08.2024): ஆவணி வெள்ளி உங்களுக்கு எப்படி?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Today Rashi Palan (30.08.2024): ஆவணி வெள்ளி உங்களுக்கு எப்படி?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Aug 30, 2024 10:49 AM IST

Today Rashi Palan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 30) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rashi Palan (30.08.2024): ஆவணி வெள்ளி உங்களுக்கு எப்படி?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!
Today Rashi Palan (30.08.2024): ஆவணி வெள்ளி உங்களுக்கு எப்படி?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

மேஷம்

பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். உயர்கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும்.

ரிஷபம்

சொத்துப் பிரிவினை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும்.

மிதுனம்

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். இழுபறியான தன வரவுகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உடனிருப்பவர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.

கடகம்

உழைப்புக்கு ஏற்ப உயர்வு உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும்.

சிம்மம்

வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் அலைச்சல் உண்டாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும்.

கன்னி

கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

துலாம்

கொடுக்கல், வாங்கலில் மேன்மை உண்டாகும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபார நிமித்தமான பயணங்கள் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும்.

விருச்சிகம்

குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பேச்சில் நிதானமும், கவனமும் வேண்டும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள்.

தனுசு

உறவினர்களுக்கிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பயணங்களில் விவேகம் வேண்டும். கடன் செயல்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். அரசு காரியங்களில் மாற்றம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

மகரம்

கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புத்துணர்ச்சியான சிந்தனைகள் பிறக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். புதிய வேலை நிமித்தமான எண்ணங்கள் கைகூடும். வியாபார பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கும்பம்

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். சேமிப்புகளை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

மீனம்

வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் விவேகத்துடன் இருக்கவும். சிறுதொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். புதிய இலக்குகளை பற்றிய மாறுபட்ட அணுகுமுறை உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்