துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று நவ.30 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று நவ.30 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று நவ.30 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

Karthikeyan S HT Tamil
Nov 30, 2024 05:05 AM IST

ஜோதிட கணக்கீட்டின்படி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசியினருக்கு மாதத்தின் கடைசி நாளான (நவ.30) இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று நவ.30 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!
துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று நவ.30 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு இன்று (நவம்பர் 30) வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே இன்றைய நாளில் ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்வாதங்களில் சிந்தித்துச் செயல்படவும். நண்பர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். கடன் செயல்களில் தெளிவுகள் உண்டாகும். தூக்கமின்மை பிரச்சனைகள் குறையும். புதிய உணவுகளில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உதவி கிடைக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தன வரவுகள் மூலம் சேமிப்பு மேம்படும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். வித்தியாசமான கற்பனைகள் மூலம் குழப்பமான சூழல் ஏற்படும். வர்த்தக செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்ளவும்.  

தனுசு

தனுசு ராசி அன்பர்களே குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பயணம் மூலம் சில மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வேலையில் இருந்துவந்த தடைகள் நீங்கும். 

மகரம்

மகர ராசி அன்பர்களே திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஒப்பந்தப் பணிகள் சாதகமாக நிறைவு பெறும். திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். மாறுபட்ட சிந்தனைகள் மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். 

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே வியாபார பணியில் லாபங்கள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். பயணம் மூலம் சில மாற்றமான வாய்ப்புகள் உருவாகும். சமூகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். 

மீனம்

மீன ராசியினரே ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.  குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பழக்கவழக்க விஷயங்களில் சிறுசிறு மாற்றங்கள் காணப்படும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner