மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று நவ.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!
மேஷம் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு இன்று (நவம்பர் 28) வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரக விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, நவம்பர் 28 ஆம் தேதியான இன்று சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த வகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
மேஷம்
மேஷ ராசி அன்பர்களே நெருக்கமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொன், பொருட்கள் வாங்கும் வாய்ப்புகள் அமையும். போட்டி, பொறாமைகள் குறையும். சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். கடினமான செயல்களையும் எளிதாக முடிப்பீர்கள். விருப்பமான உடைகளை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும்.
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து செயல்படுவீர்கள். வியாபாரிகள் தங்கள் செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும். திடீர் யோகங்கள் மூலம் மாற்றம் பிறக்கும்.